திக்குத் தெரியாத உலகில்
சின்ன வயதில் சூட்டுக் கொட்டையை தரையில் உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்பளித்துவிடும் விளையாட்டை விளையாடியிருக்கிறேன். நல்ல சூடு இருக்கும் . அது போல் கொரானா செய்திகள் சூட்டுக் கொட்டை சூட்டைப் போல் வலிதருகின்றன.
ஒரு கோப்பையில் இருக்கும் வெந்நீர் 80 பாகை செல்சியஸ் என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரும் 80 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கலாம். ஆனால், கப்பில் இருக்கும் நீரின் வெப்பசக்தியை விட, பெரிய பாத்திரத்தில் இருக்கும் நீரில் அதிக வெப்பசக்தி இருக்கும். காரணம் பெரிய பாத்திரத்தில் அதிகளவான நீர் மூலக்கூறுகள் இருக்கும். பெரிய பாத்திரமாய் பூமி சூட்டில் தவிக்கிறது.
சீன இனக்குழு ஒன்றின் திருமணச் சடங்கொன்றில் தீமிதியில் மனைவியை கணவன் கையில் ஏந்தி எடுத்துச் செல்லும் வைபம் ஒன்று உள்ளது. தீ எரியும் சூழல் என்றாலும் மனைவியைக் கையிலேந்திக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படியொரு சடங்கு இருக்கிறதாம்.
கொரானா என்ற தீ மிதி குண்டத்தையே தாண்டி வந்திருக்கிற நாடு சீனா. சீனர்கள் திமிதி குண்டங்களைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.
நாம் தீ மிதி போன்ற அதிகமாகும் வெப்பம் – ஏப்ரல், மே காலங்களில்-கொரானாவிலிருந்து நம்மைக்காப்பாற்றும் என்பதை கடவுள் நம்பிக்கை போல் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தின் பத்து நகரங்களில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெயில் சதம் அடித்து சிலருக்கு அப்படியெல்லாம் நம்பிக்கை தந்திருக்கிறது. ஆனால் கொரானா கட்டுப்படாமல் எகிறிக் கொண்டிருக்கிறது .
அமெரிக்க அதிபர் டிரம்ப் மெக்சிகோ தடுப்புச்சுவர் மூலம் இடம்பெயர்வு சம்பந்தமான – மாபெரும் தடை ஒன்றுக்கு முயற்சித்து வருகிறார், வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஒரு தடுப்புச்சுவர் ஒன்றை அவர் வந்த போதே கட்டி முடித்து விட்டார் என்றார்கள் கிண்டலாக.
டிரம்ப் இந்தியா வந்த போது ஏழை மக்களின் வெப்பப்பார்வை படாமல் இருக்க சுவர் கட்டினார்கள் சாலையில்.
வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பல ஆண்டுகளாக நடந்து வரும் சர்வதேச முயற்சிக்கு இப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவு இல்லாததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது சென்றாண்டின் செய்திதான்.முந்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்து நடவடிக்கைகளைத் தொடர்ந்தார் . இந்த முயற்சிக்கு முன் மாதிரியாக இருந்து முன்னர் அமெரிக்கா தலைமை தாங்கியது. இனி தலைமை தாங்குமா என்பது கேள்விக்குறியாகி விட்டது .
இன்றைக்கு கூட உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க தரும் நிதியுதவியை ரத்து செய்து ஒரு உத்தரவு போட்டுள்ளார்.அவர்கள் மேல் பழி போடும் முயற்சியாக ரு வெப்ப குண்டைப் போட்டிருக்கிறார்.
அவர் ஆட்சிக்கு வந்த பின் சிறுபான்மையினர் நலன், இந்தியர்களின் வேலை வாய்ப்பில் பல கெடுபிடிகளைப் செலுத்தியுள்ளார் டிரம்ப். இப்போது பெரிதாய் கை வைத்திருப்பது புவிவெப்பம் மக்களுக்கு ஆதரவான முயற்சிகளில் பெரிய முட்டுக்கட்டைகளை அவர் வைத்துள்ளார் இதில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் போக்க நடவடிக்கை எடுத்திருப்பது நல்லது .தொடர்ச்சியாக இதிலும் முனைந்துள்ளார்
உலக அளவில் பருவநிலை மாற்றம் என்பது வெப்ப சலனக் காற்று, பனிப்பகுதிகள் உருகுதல், வெள்ளம் அல்லது வறட்சி மற்றும் கடல் மட்டங்கள் உயர்தல் போன்றவை விளைவுகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.அதன் அடையாளங்களை சமீப மாதங்களில் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் பருவகால மழை என்பது பெரும் மாற்றம் இல்லாமல் ஏமாற்றத்தையே தருகிறது வங்காள விரிகுடாவிலும் புயல்கள் என்தில் 2000 க்கு முன் பெரிய மாற்றம் இல்லை இமாலயப் பனி உருகி வருகிறது.
21ம் நூற்றாண்டில் 15 முதல் 30 சதவீதம் வரை மழையளவு அதிகரித்த போது இதே சீதோஷ்ண நிலை வெப்பம் 5 சதவீத சென்டிகிரேட் அளவு உயர்ந்தது . ஆல்ப்ஸ் பகுதியில் சில செடிகள் அபூர்வமாக வளர்கின்றன பல செடிகள் மறைந்துவிட்டன இங்கிலாந்தில் பறவைகளின் சுபாவத்தில் பல மாற்றங்கள் தென்படுகின்றன முட்டையிடும் 65 பறவை இனங்கள் ( பறந்து செல்பவை அவை ) முட்டை போடும் காலத்தை முன்னதாக்கிக் கொண்டிருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையில் 17 பில்லியன் மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். இது 2025இல் 25 மில்லியனாக உயரும் . இந்த காலத்தில் 480 மில்லியன் ஆப்பிரிக்கர்கள் தண்ணீருக்காக அலைவர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விளைச்சல் இந்த காலத்தில் வெகுவாக குறையும்.
அதிக வெப்ப நாட்களில் வயதானவர்களின் நோய்கள் அதிகரிக்கும் மரணமும் அதிகரிக்கும் என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் உள்ளன. கால்நடைகளை மிகவும் பாதிக்கும் பயிர்களை நாசம் விளைவிக்கும் சுற்றுலாத்தலங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலச்சரிவு வெள்ளம் அதிகரிக்கும் . உலக நிலப்பரப்பில் 2.4% இந்தியாவை சாரும் 17% மக்களும் 15% கால்நடைகளும் இதில் அடக்கம். இந்தியாவில் சிறு விவசாயிகள் அதிகம் இருக்கிறார்கள் பங்களாதேசிற்கு அடுத்தபடியாக சிறு விவசாயிகள் இங்கு அதிகம்.
இந்தியா வறட்சியின் பிடியில் அதிகம் சிக்கும் இந்தியாவின் பருவ நிலைகள் பாதிக்கப்படும் இந்தியாவின் பருவ நிலைகளை ஒட்டி இந்திய விவசாயம் பாதிக்கப்படும் . தமிழ்நாடு ஏழில் மூன்று பகுதி மழையை நம்பி இருப்பது பருவமழை தவறியதால் உணவு உற்பத்தியும் கால்நடைகள் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகும் பருவநிலை மாற்றத்தில் ராகி போன்றவை பொதுவாக பாதிக்கப்படும் ராகி பயிர் விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டது உணவுப் பாதுகாப்பு என்பது சில பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் . 1979 உலக அளவில் பருவநிலை மாற்றம் சிக்கலாக மாறும் என்று கண்டறியப்பட்டது . அப்போது கரியமிலவாயுவின் தன்மை உயர்ந்திருப்பது உணரப்பட்டது .இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது இது மின் உற்பத்தியை பாதிக்கும் .
சூரிய ஒளியைப் பயன்படுத்தும் உணர்வு அதிகரித்திருக்கிறது அதேசமயம் காடுகளை அழிப்பதும் அதிகரித்து வருகிறது . மனித குல பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை பரிமாற்றம் என்பது அமைந்திருக்கிறது .
இன்னும் 15 ஆண்டுகளில் மிகவும் குறைந்த மழை பொழிவு என்பது பெரும் கொடூரக்கனவாக இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையை உருவாக்கும் போர்வெல்களால் அதிகம் சுரண்டப்பட்டு விடும் .விவசாயத்தில் நீரின் பயன்பாடு குறையும் அதிக வெப்ப சூழல் பயிர் வளர்ச்சியைக் குறைக்கும் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கும் விவசாயிகளை வேறு தொழில்கள் மற்றும் நகரங்களை நோக்கி நகர செய்யும் மற்றும் வறுமை அவர்களை சூழவும் செய்யும். ஈரமற்ற காற்று பயிர்களைப் பாதிக்கும்.
அதிக வேகத்தில் காற்று வீசுவது பயிர்களைப் பாதிக்கும். விளைச்சலைக் குறைக்கும். மண்ணரிப்பு அதிகமாகவும் மரங்களும் காய்கறி செடிகளும் இல்லாது குறையும். பஞ்சம் தலைவிரித்து ஆடி சொட்டுநீர் பாசனம், பயிர்களுக்கு இன்சூரன்ஸ் என்பதை சாதார மக்களை அவற்றுள் தள்ளும் மாற்றுப்பயிர்களை நாட வேண்டியிருக்கும். உரங்களின் தன்மையை மாற்ற வேண்டியிருக்கும் அதிக வெள்ளம் மண்ணரிப்பைக் கொண்டு வரும் விவசாய நிலங்களீன் பல குறைகளின் மத்தியில் மக்கள் தங்கள் வாழ்க்கை காரணங்களையும் எதிர்நோக்குவது சிறந்தது
மறுபடியும் முன் இடத்திற்கு வருவோம் முன்னாள் அதிபர் கொண்டு வந்த திட்டங்களை இப்போதைய அதிபர் குழுவினர் மறுத்து ரத்து செய்திருக்கிறார்கள். இப்போது டிரம்பின் கை பருவநிலை மாறுபாட்டுக்கொள்கையிலும் விழுந்திருக்கிறது.. பருவ நிலை மாற்றத்தைக்கட்டுப்படுத்துவது தொடர்பான ” 2015 பாரிஸ் உடன்படிக்கை பற்றி ” டிரம்ப் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் பல ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்கிறார்.
பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் செய்யாமல் தூய்மையான காற்று, சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வேன் என்கிறார்.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அவரின் அரசு உறுதி அளிப்பதை சூழலியலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் விரைவாய் சூடாகும் பூமியை யாரால் தடுக்க முடியும்.
கொரானாவிலிருந்து சூடாவதை 14, 21 நாட்களை மீறி காலம் தான் தீர்க்கவேண்டும்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
- மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
- கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
- ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
- 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
- எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
- பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
- புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
- பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
- குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
- வங்கதேசப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி - சுப்ரபாரதிமணியன்
- டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
- பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
- வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்