திக்குத் தெரியாத உலகில்

பாலின பேத வன்முறை ( Gender Based Violence )-4

“12 வயதில் ஒரு பனியன் கம்பெனியில் குழந்தை தொழிலாளியாக டாக்காவில் பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 15 வயதில் தொழிற்சங்க பதவியாகம் தலைவராகவும் ஆகியிருக்கிறார். அவர் மோசமான சூழலில் அங்கு இருந்த பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்கிறபோது பெண்கள் சிரமப்படுவதையும் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்தாலும் குடும்ப நிர்வாகத்திற்கான வருமானத்தை ஈட்ட முடியாமையும் சிரமம் தந்திருக்கிறது”

பாலின பேத வன்முறை குறித்து தொடர்ந்து பிரச்சாரங்களும் இயக்கங்களும் நடத்துகிறார். அவரைச் சந்தித்தபோது..

கல்போனா அக்டர் ( Kalpona Akter Bangladesh ) “உலகம் முழுக்க தொழிலாளி வர்க்கம் மிகுந்த சிரமத்தில் இருக்கிறது. தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கிறது. வெற்றியும் பெறுகிறார்கள். அவர்களை எல்லாம் நான் சந்திக்காவிட்டாலும் அவர்களுடைய மொழி எல்லாம் நான் பேச தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவர்களுடன் நான் கூட நிற்கிறேன். தொழிலாளர் நலன், நீதி போன்றவற்றிற்கான அவர்களின் சூழலுடன் நானும் இருக்கிறேன். பெண்கள் தங்களுடைய உரிமைக்காகவும் பெருமைக்காகவும் போராடுகிற போது நானும் அந்தப் போராட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கிறேன். பிற நாடுகளில் தொழிலாளர்கள் அடக்க படுகிறபோது எனக்கு பயமாக இருந்தது .ஆனாலும் நான் தனியாக இல்லை என்பதை நான் உணர்கிறேன் .பெரும்பான்மையான தொழிலாளர்கள் போராடுகிற போது தடுக்கப்படுகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து போராட்டங்கள் எனக்கு உத்வேகத்தை தந்துள்ளன.

ஒவ்வொரு வெற்றியும் நான் செயல்பட இன்னு குறை இருக்கிறது என்பதைச் சொல்கிறது. மனித உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் நான் தனியாக இல்லை நமது அனுபவங்கள் எல்லாம் மடைமாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இது யாருடைய நலனுக்காகவும் என்றில்லாமல் தொழிலாளர்களுக்கு என்ற வகையில் தொடரும்” என்கிறார். கல்போனா அக்டர் என்ற பின்னலாடை துறைசார்ந்த தொழிலாளர்களுக்காகப் போராடும் 50 வயதுப் பெண்மணி.

தற்போதைய வங்கதேச தொழிலாளர் ஐக்கிய அமைப்பின் இயக்குனராக இருக்கிறார். உலகளவில் மனித உரிமைக்கான பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். 12 வயதில் ஒரு பனியன் கம்பெனியில் குழந்தை தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 15 வயதில் தொழிற்சங்க பதவியாகம் தலைவராகவும் ஆகியிருக்கிறார். அவர் மோசமான சூழலில் அங்கு இருந்த பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்கிறபோது பெண்கள் சிரமப்படுவதையும் ஒரு நாளைக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்தாலும் குடும்ப நிர்வாகத்திற்கான வருமானத்தை ஈட்ட முடியாமையும் சிரமம் தந்து இருக்கிறது, நல்ல கழிப்பறைகூட இல்லாத சூழல் தொடர்ந்து தொழிலாளர்கள் அடிமைப்ப்படுத்துதல் சூழலில் அதை எதிர்த்துப் போராடி இருக்கிறார். அடி உதை பட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். 2002இல் அவருடைய சகா இஸ்லாம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டபோது அவருக்கு பெருத்த அச்சுறுத்தல் இருந்திருக்கிறது. பின்னலாடை தொழில் துறையில் இருக்கிற பெண்கள், தொழிலாளர்கள் சார்ந்த போராட்டங்கள் அவர்களுடைய உரிமை, சமுதாயம் பாதுகாப்பு குறைந்தபட்ச ஊதியம் தொழிற்சங்கங்களில் இணைந்து போராட தற்காப்புரிமை போன்றவற்றில் அவருடைய போராட்டங்கள் பெரிய அளவு பங்களிப்பை செய்திருக்கின்றன. உள்ளூர் காவல்துறை ராணுவம் அரசு போன்றவர்களுடைய அதிகாரம செயல்பாடுகளால் அவர் அலைக்கழிக்கப்பட்டபோது உலகநாடுகளின் பத்திரிகைகளும் ஊடகங்களும் அவருக்கு மிகுந்த ஆதரவைத் தந்தன.

குறிப்பாக டாஜூரீன் கட்டடம் தீப்பிடித்து 12 தொழிலாளர்கள் கருகி செத்தபோதும் ராணா பிளாசா அதனுடைய 6 மாடி கட்டிடம் இடிந்து 1100 பேர் இறந்தபோதும் அவருக்கு பல நெருக்கடிகள் இருந்தனம் டாஜூரீன் தீ விபத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தப்பித்த ஒரு பெண்ணுடன் அவர் அமெரிக்காவிற்குச் சென்று அந்த தொழிலாளர்களுடைய இழப்பிற்காக நிதி தேடினார். அதேபோல ராணா பிளாசா விபத்திற்குப் பிறகு அமெரிக்கா ஆர்டர்கள் வங்கதேசத்துடனான வியாபார ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அது வங்கதேச தொழில் சார்ந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தது . ஆனால் உலக தொழிலாளர் மனித நல உரிமை போராளிகளும் தொடர்ந்து கல்பனாவிற்கு ஆதரவு கொடுத்து வந்தது அவரைத் தொடர்ந்து போராடவைத்தது. அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அக்கறை கொண்டவர்கள் பங்களாதேசின் தொழிலாளர் மீதான வன்முறை குறிப்பாக பின்னலாடை துறை சார்ந்த தொழிலாளர்கள் பற்றி மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு பல செயல்பாடுகளைச் செய்தார்கள்.

வங்கதேசம் இப்போது உலகளவில் இரண்டாவது ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் நிலையில் இருக்கிறது தொழிலாளர்கள் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும் , உற்பத்தியை பெருக்க வேண்டும் மற்றும் அங்கு இருக்கிற வேலை சூழல் போன்றவற்றை சார்ந்து நிறைய போராட்டங்களில் பங்குபெற்று அந்தத் தொழிலாளர்களை இணைத்திருக்கிறார் இவர்.. சிறையில் அடைக்கப்பட்டபோதுகூட அவர் இந்தப் போராட்டம் நீண்ட போராட்டம் என்பதை திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறார், சக ஊழியர்களும் தன்னுடைய அமைப்பின் இருந்தவர்களும் கொல்லப்பட்டபோது தொழிலாளர் மீதான வன்முறையும் அந்த கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியும் சரியாக நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் முன் நின்று போராடியிருக்கிறார்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக இன்றைக்கு வங்கதேசப் பெண்கள், ஆடைத் தொழிலாளர்கள் தங்களுடைய சம ஊதியம் பெண்களுக்கான உரிமைகளை பெற்று வறுமை சம்பளம் என்பதை மீறி வாழ்க்கைக்கான சம்பளத்தைப் பெற்று வாழ உறுதி செய்யப்பட்டிருக்கிறது இந்த உதவியைத் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் கல்பனோவின் விருப்பமாக இருக்கிறது.

முந்தைய தொடர்கள்

3.டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம் – https://bit.ly/3b6jyvB
2.பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள் – https://bit.ly/2vysACp
1.வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு – https://bit.ly/33wiGhg

*

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. வேடந்தாங்கலுக்கு வைத்த வேட்டு-சுப்ரபாரதிமணியன்
 2. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியைச் சூழும் அழிவின் மேகங்கள்-சுப்ரபாரதிமணியன்
 3. கொரோனா காலத்துக் கொடுங்கதைகள்-சுப்ரபாரதிமணியன்
 4. கொரோனா: மாயன் காலண்டர் சொன்ன உலக அழிவா? - சுப்ரபாரதிமணியன்
 5. ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு- சுப்ரபாரதிமணியன்
 6. 'டீ ஷர்ட்’களாக மாறும் தண்ணீர் பாட்டில்கள்- சுப்ரபாரதி மணியன்
 7. தகியாய் தகிக்கும் பூமி- சுப்ரபாரதி மணியன்
 8. எழுத்தாளனும் காய்கறியும்—சுப்ரபாரதிமணியன்
 9. பசுமை வியபாரம் : சுப்ரபாரதிமணியன்
 10. புது அகதிகளின் உலகம் - சுப்ரபாரதிமணியன்
 11. பொதுப் பள்ளிக்கல்வியும், பாடாய்படுத்தும் தொடக்கக்கல்வியும் – சுப்ரபாரதிமணியன்
 12. குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் - சுப்ரபாரதிமணியன்
 13. டாக்கா நகர பெண்களின் குரல்களைக் கேட்டோம்
 14. பாலியல் கொடுமைகளின் நூறு முகங்கள்
 15. வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல், பாலின பாகுபாடு -சுப்ரபாரதிமணியன்