முன்பு ஒரு காலத்திலே-10

“அரச மரத்தடியிலே

சுற்றிவரும் பொழுதிலே

ஞானம் வரும்

தெளிவு வரும்

மந்தம் தீரும் நிலையிலே”

என்னடா இது பாட்டு மாதிரி இருக்கேன்னு பாக்கறீங்களா? பாட்டுதான்   வேறென்ன?

அரச மரத்தை 108 தடவை சுற்றி வந்தால் பிள்ளை பிறக்கும் என்று சொல்வது. புத்தருக்கு ஞானம் வந்ததே இந்த போதி மரத்துல தான் சொல்வது.மூணு கடவுளும் ஒத்துப் போய் குடியிருக்கிற மரம் அரச மரம் என்று சொல்வது. அரச மரத்தடியில் ஏண்டா பிள்ளையார் மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கிறது என எல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல.இருக்கும்.

ஏன்னா அரச மரம் இல்லாத குளத்தங்கரை கிராமம் பொதுவா அந்த காலத்துல இல்லன்னு தான் சொல்லுவேன்.பிள்ளையாய் இருக்கிறப்போ கலகலன்னு காத்துல ஆடுற சத்தத்தோடு அரசமரத்தை சுற்றுவது இன்னும் ஞாபகம் இருக்கு.காலங்காத்தால பெரியவங்க வந்து மேடையில உட்கார்ந்துகிட்டு பல் விளக்கிக் கொண்டே ஊர்க்கதை பேசுற இடம் இந்த அரச மரம்தான்.

அரசமரத்தில் நல்லா காத்து ஜில்லுனு வரும்.அதுவும் காலையில் சூரியன் இலையில பட்டு அடிக்கிற காத்துல சில்லுன்னு வந்து உடம்பில் படும் பாருங்க,ஏதோ மயிலிறகு மேலப்பட்டு பரவுற மாதிரி உணர்வு ஏற்படும்.அரச இலை பார்க்கவே நம்முடைய இதயத்தை ஞாபகப்படுத்தும். அப்படியே இதயம் மாதிரியே இருக்கும்.நல்லா உசரமா 80 மீட்டர் வரை வளரும்.100 வருஷம் வரைக்கும் இருக்கும்.என்ன சனிக்கிழமை ஆச்சுன்னா பொம்பளைங்க அரசமரத்தை சுத்திகிட்டு இருப்பாங்க,விளையாட முடியாது.

என்னத்துக்கு இதைப்போய் 108 தடவை சுத்தணும் என்று கேள்விகேட்டு பேசாம வீட்டுக்காரனை சுத்துனாவாச்சு புண்ணியம் கிடைக்கும் என்று சொல்ல அண்ணியோட அரசமரம் பக்கம் வந்தா உதவிழும்ன்னு அத்தைக்காரி துரத்த ஏன்டா வம்புன்னு சனிக்கிழமை அரசமரத்து கிட்ட போறதில்லை.ஏன் அரச மரத்தை 108 தடவை சுத்துனா புள்ள பொறக்கும் ன்னு சொன்னாங்க. எனக்கு சரியா படலை.அதனால நான் ரொம்ப வருஷம் மூடநம்பிக்கை மரமா அரச மரத்தை  மாத்திட்டாங்கன்னு பேசிக்கொண்டிருந்தேன்

அப்புறம் டாக்டர் காமராஜ்,அதாங்க முன்னாள் அமைச்சர் தம்பி பெரிய டாக்டர் நல்லா பேசுவாரு, இப்ப பாத்தா தொலைக்காட்சி யூடியூப் என்று சகட்டுமேனிக்கு வந்து பேசிட்டு இருக்காரு.அவர் கிட்ட கேட்டேன். மூடநம்பிக்கையை நினைத்து அதுக்கு நான் என்ன சொல்ல .சொன்ன ஆளுங்களோட வில்லங்கம் தான் .ஆனால் அரச மரம் நல்ல ஆக்சிஜனை கொடுக்குற மரம். அதுல  அரை மணி நேரம் உட்கார்ந்தால் நல்ல காற்று பட்டு சுவாசப்பை,கர்ப்பப்பை வலுவாக மாற வாய்ப்பு இருக்கு .நம்ம ஆளுங்க எங்க நேரடியா சொன்னா கேக்குறாங்க?அதான்   சாங்கியத்தோடு சேர்த்து செய்.  அப்படி செஞ்சா புள்ள பொறக்கும்னுட்டங்க.

அது எப்படி ஒரு ஆம்பள இல்லாம புள்ள பொறக்கும்.ஆம்பள மட்டும் இருந்தா போதுமா?உடம்பு ஆரோக்கியமா இருக்கணுமில்ல.அதான் அரச மரத்தை சுத்தி வந்தாங்க.ஆரோக்கியம் சம்பந்தமான சமாச்சாரம்தான் அது புரிஞ்சுக்கிட்டா சரி இன்னும் தெளிவாக உடைக்கிற மாதிரி சொல்லிட்டாரு. அரசமரம் என்று ஏன் பெயர் வந்தது .சிந்து சமவெளி அரசமரம் பத்தி இருக்குதுன்னு சொல்றாங்க. மரங்களுக்கு எல்லாம் அரசன் இந்த மரம் எப்படி?

எல்லாம் மரத்தை விடவும் பெரிதாகவும் அகன்றும் வளர்ந்து நிற்கும் .அரசமரம் பார்க்கவே ஜெய்ஜாண்டிக்கா இருக்கும்.அதனால இந்த மரம் அரசன் ஆயிடுச்சு .அரச இலை பார்த்தீங்கன்னா இதய வடிவத்தில் இருக்கும். நான் பார்த்திருக்கேன். சில ஓவியர்கள் அரச இலையிலே படம் வரைஞ்சு வச்சுருக்காங்க டிசைன்ல நல்லா இருக்கும்.

சங்க காலம் தொட்டு அரசமரத்தை யாரும் விடலை. ஏதோ ஒரு விதத்தில் மதிக்க ஆரம்பிச்சாங்க .ஏன் இப்பவும் கல்யாணத்துக்கு அதாங்க பந்தக்கால் நடுவது அரச மரக்கிளையை தான். நம்ம பண்பாட்டோடு அது கலந்துடுச்சு.எங்க குடும்பத்துல இந்த அரசாணிக்கால் நடனத்துக்கு சம்பந்திய  கூப்பிட மாட்டாங்கன்னு பல வருஷமா சண்டை போயிட்டு இருக்கு.அவரது சொந்த பந்தத்தில், முக்கியமான பெண்கள் இந்த பந்தக்கால் நடுவது கூப்பிடுவதில்லை தான் இருக்குன்னு நம்பறாங்க.இதுல குடும்ப பெரியவங்க ஜாக்கிரதையா இருப்பாங்க .இல்லைன்னா வில்லங்கம் தான் உறவில் விரிசல் வரும் என் கல்யாணத்துல இந்த விஷயம் எதுவும் குறுக்க வரலை என்ன சீர்திருத்த முறைப்படி நடந்த கல்யாணம் எனது .

அதுலயும் பாரதி பதிப்பகம் வெளியிட்ட வசந்த நினைவுகள் அப்படிங்கிற கவிதை நூல் வெளியீட்டு 1ஆம் வகுப்பு முதல் காலேஜ் வாத்தியார் வரை வந்து வாழ்த்தி பேச பெரியார் தாசன் தலைமையில் தாலி கட்டி முடித்தேன்.அரசமரம் பிரச்சனை வரலை.அதுக்கப்புறம் எங்க குடும்பம் உறவுகள் எல்லாத்துலயும் பந்தக்கால் முறை வரும்.நானே முன்னின்று பாத்துக்குவேன்.அதிகம் அப்படி புத்தருக்கு போதி மரத்துக்கு கீழ தான் ஞானம் வந்துடுச்சுன்னு இன்னிக்கு வரைக்கும் சொல்வாங்க .இல்லைன்னு குறுக்கு சால் ஓட்ட இதுல என்ன நியாயம் இருக்கு.

ஏதோ ஒரு பிரச்சனையோடு வந்து போதிமரம் அதான் அரசு மருத்து கீழே உட்கார்ந்து இருக்கலாம். அரசமரத்து ஆக்சிஜன் சிலு சிலுவென காத்து மேல பட்டு போகும் போது சுகமா இருக்கும் .இப்படியே உட்கார்ந்து தூங்குற மாதிரி இருக்கு மனசு லேசான மாதிரி படும் அந்த சூழல் வாழ்க்கையில் இன்னொரு பகுதியை காண்பிக்கும் தெளிவான நிலையில் தன்னுடைய சிந்தனையை வெளிப்படுத்தியிருப்பார் .அதான் இந்த அரச மரம் போதி  மரமாக மாறி இருக்கு .உண்மைதான் மரத்தின் அடியில் அமர்ந்து கண்மூடி எளிதாகவும் தெளிவாகவும் மனசு இருக்கும். அத அனுபவிச்சா தான் புரிஞ்சுக்க முடியும்.

நான் இன்னிக்கும் ஏதோ ஒரு மரத்தடி கிடைச்சா சட்டுனு உட்கார்ந்து அக்கடான்னு படுப்பேன். புடிச்சதை எழுதுவேன் .இயற்கை எவ்வளவு சுகம் என்று வையுங்களேன் .இதில் அரசமரம் ஒருபடி மேலே. என்ன நகரத்தில் ச மரம் வளர்க்க இடமும் இல்லை. எல்லாம் சதுர அடி கணக்கில் போகுது .அப்புறம் அடுக்குமாடி வாழ்க்கையே போச்சு .எவனுக்கும் தரை சொந்தம்  கூரை சொந்தம் என்று தெரியலை ..

கேட்ட போட்டு வாட்ச்மேன் வெச்சு எவனும் உள்ள வரக்கூடாதுன்னு கூடாரம் போட்டு கொடுத்துட்டாங்க. பேசாம வாட்ச்மேன் நிக்கிற இடத்துல யாவது காத்தோட்டமா நிழலுக்கு மரத்தை நடலாம் எந்த இன்ஜினியர் சொல்றாங்க.சில பேரு அரச மரத்தைக் கட்டிப் பிடித்து கொஞ்ச நேரம் நிக்கிறதை பார்த்து இருக்கேன்.இது என்னடா புதுசா இருக்கேன்னு கேட்டேன். நீண்ட ஆயுளோடு பலமாக வாழ மரத்தைக் கட்டிப் பிடிச்சா அதோட பலம் நமக்கு வரும்.  சரி இருக்கட்டும் .மனுஷன் செய்யாததை மரமாவது செஞ்சுட்டு போகட்டுமே.

அரச மரத்தின் பட்டை மருந்து .காயம் பட்டுசின்னா பட்டை அரைச்சு வச்ச சரியாக போகும்.இந்த மரத்தோட பழத்துக்காகவே எங்க இருக்கிற பறவைகளும் வந்து அரச மரத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு காச்சு மூச்சு என்று சத்தம் போட்டு கேட்கவே இசைக்கச்சேரி மாதிரி இருக்கும். நான் கேள்விப்பட்ட கதைய உங்க கிட்ட சொல்லி தரேன். ஏன் வச்சுக்கிட்டு வம்பு. வேப்பமரம் அரசமரம் இரண்டுக்கும் கல்யாணம் பண்ணி வச்சு பார்த்து கும்பிடுவது ஒரு சடங்கு .என்னடா இது மரத்துக்கு மரத்துக்கும் கல்யாணமான்னு கேட்கப்படாது.மனுஷன் மழை வருவதற்கு நாம இன்னும் என்னவெல்லாம் பண்றோம் .விடுங்க அத போய் … அரசமரத்தை ஆண் , வேப்பமரத்தை பெண் என இரண்டுக்கும் கல்யாணம் .அதனால சில இடங்களில் இரண்டையும் பக்கத்து பக்கத்தில் வளர்ப்பார்கள் .2 மரமும் ஆக்சிஜன் கொடுக்கும் அதனால் அந்த காலத்து கர்ப்பிணி பெண்களுக்கும் .ஆண்களுக்கும் நல்லது தான் அதிகம் வழிபடும் மரங்களாக என்ன பட்டு மரம் சுற்றியும் பெருக்கி கோலமிட்டு அழகு சேர்ப்பது பெண்களுக்கு மகிழ்ச்சி .இதுபோல மரங்களைப் பற்றி

ஆழமுடைய பொய்கை சூழ்ந்த

பொழில் மனை மகளிர்

என்று அகநானூறு சொல்கிறது.மரம் நமக்கு வணங்கும் இயற்கைதான்.  எவனும் லேசுல அரசமரத்தை வெட்ட துணிய மாட்டான்.ஏன்னா இது கடவுள் மரம்.பொதுவா இதை என் வீட்டு பக்கத்துல வைக்க மாட்டார்கனா  இது பெரிய மரம்.வேர் எல்லாம் பரந்து விரிந்திருக்கும்.அது வீட்டை பிளந்திடும்.அதனால குளத்தங்கரை பக்கத்தில் வைப்பாங்க. சிலசமயம் மழைக்காலத்தில் மரத்திலேயே சின்னதா குடை  விரிச்ச  மாதிரி காளான் முளைக்கும்.அது எப்படின்னு தெரியல.அந்த சூழல் படத்தை பார்த்துட்டு நம்ம நண்பர் நடிகர் விஜய் அன்பு இப்படி விவரிக்கிறார்

” ஆதி மரத்தை மேடையாக்கி

அதில் காலூன்றி நின்ற

பூர்வகுடி காளான் கூட்டம்

தங்களின் சுதந்திரப் புரட்சி

வேட்கையை வான் தொடும்

கரகோஷம் போராட்டம் நடத்தும்

அதிகாலை அழகியல் அற்புதக் காட்சி”

என்று எழுதி இருப்பது குறித்தான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.

அரச மரத்துக்கு  நம்ம நாடு பெரிய மரியாதை கொடுத்து இருக்கு .பாரத ரத்னா பட்டத்துல  இந்த இலை நிச்சயமாய் இருக்கும். அரசம்பழம் இருக்கே!அத நல்லா காய வச்சி இடிச்சி அரிசிமாவு ,வெல்லம் கலந்து புட்டு செஞ்சு சாப்பிட்டா.,கிழவன் கிழவிக்கு கூட குழந்தை பிறக்கும் என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு.இந்த பழம் ரத்த கொதிப்பை போக்கும்ன்னு  சொல்லுவாங்க. கருப்புசாமி கோயில் படையலுக்கு இந்த அரசை இலை தான் பிடித்தது.இன்னொன்னு சாமை அரிசி அரசம்பழ ரசம் சேர்த்து செய்யறதை  பரிவார தேவதைகளுக்கு நிவேதிதம் பண்ணிட்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் சாப்பிட தருவது என்பது கிராம மக்கள் பேச்சு.

சரி என்ன தாத்தா பண்றீங்க இன்னைக்கு என்ன மரம் அப்படின்னு கேட்டுக்கிட்டு வந்த பேத்தி கிட்ட அரசமரம்  என்று சொன்னேன்.அடுத்த நொடி கூகுள்ல போய் சொல்ல ஆரம்பிச்சுட்டா

இது மொராசேயே குடும்பம்,

பைக்கஸ் (figus) பேரினம்,

பை.ரிலிஜியொசா-இனம்,

ரோசாமெஸ் -வரிசை,

இது இந்தியா,இலங்கை,சீனா,இய்தோனேசியா,வியட்நாம் இங்கெல்லாம் வளருது.

சரின்னு கேட்டுக்கிட்டேன்.ஏன்னா நம்ம வள்ளுவர் தாத்தா சொன்னது தான்

 “தம்மின் தம்மக்கட் பெரியர்”

கேட்டுப்போம்

‘முடிஞ்சா அரசமரத்துக்கு போ’ன்னேன்

‘கூட்டிட்டு போக வேண்டியது உங்க வேலை’ன்னா

சரி.

அரசமரத்திற்கு நன்றி.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்