முன்பு ஒரு காலத்திலே-7

பாலகுமாரன் சொன்னது இன்னிக்கும் அப்படியே காதுல கேட்குது.

 யோவ் இந்த புளிய மரத்துக்கு வாய் இருந்தா என் இடத்துல வந்து இப்படி அழிச்சிட்டியம்  பண்றீங்கன்னு கதறும் ராசி”ன்னார்.

 “ஏன் சார் என்ன ஆச்சு ?”

திண்டிவனம் தாண்டி விழுப்புரம் போற வழியில ராத்திரில பாக்கணும்.

 லாரி ஓட்டரவங்க  அப்படி அப்படியே புளியமரம் பக்கம் ஓரம் கட்டி இறங்குவாங்க.

 அந்த புளிய மரத்துல இருந்து ஜெகஜோதியா  மல்லிப்பூ வாசனையோட  லைட் வெளிச்சத்துல சிரிச்சுகிட்டு வருவாங்க .அதுக்கப்புறம்,,,

“ வேணாம் சார் புரியுது .அதுக்கு புளியமரம் என்ன பாவம் பண்ணிச்சு”ன்னேன்.

யோவ்! ஏன்யா ?அவசரப்படாதே .நான் எதுவும் தப்பா சொல்ல வரலை ,வாழ்க்கையோட போக்கை சொல்றேன்னு சொல்லி விவரிக்க ஆரம்பித்தார்.

 இந்த சம்பவம் பின்னணியை வச்சு ஏதோ ஒரு நாவலை எழுதப் போவதாகவும் சொன்னார். ஒருவேளை அது எழுதப்பட்டிருக்கலாம் .அது இங்க முக்கியமல்ல. நான் சொல்ல நினைத்தது புளியமரத்து சங்கதிதான் .புளியமரம் எல்லா சாலைகளையும் இரண்டுபக்கமும் நிறைந்து இருக்கே. என்ன காரணம் ?எதுக்குவச்சாங்க?

அதுல எதுவும் விசேஷம் இல்லாமையா வெச்சிருப்பாங்க. நான் ஒரு தடவை ஊரான் வீட்டு தோப்புல கீழே விழுந்து கிடக்கிற புளியம்பழத்தை பொறுக்கி டவுசரில் போட்டுக்கிட்டு கிளம்பலாம் என்று  நினைச்சப்ப, அந்த வீட்டுக்காரர் அப்படியே தலை பிடித்து இழுத்து, எழுப்பி நிற்க வைத்து தோப்புக்கரணம் போட வச்சி இனிமே இந்தப் பக்கம் உன்னை பார்த்தேன் அவ்வளவுதான் தோலை உரித்து விடுவேன் என்று மிரட்டி அனுப்பி விட்டார்.

 எனக்கு வேத்து கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

 ஆஹா நேத்து கதை அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சு இனி அவ்வளவுதான் சத்தம்னு நான் ஒன்னும் தெரியாத மாதிரி  நடிச்சேன்.

“அப்பா  வேணாம்ப்பா”

 “டேய் சொல்றேன்ல போடா போய் பறிச்சுட்டு வாடா”.

 “இல்ல வேணாம்”

 நான் இருக்கேன்  போடா ங்கிறேன்.எனக்குத்தானே பிறந்து சொன்னா கேக்க மாட்டியா .சேர்த்ததும் நிஜமாகவே ஒன்னுக்கு வந்துடும் போல இருந்துச்சு.

 வேற வழி இல்ல ன்னு மரத்திலேறி கொஞ்சம் பழங்களை   பறிச்சேன்.

 ஏன்டா இந்த தோப்பு நம்பளதா?

பின்ன எதுக்காக மரத்தில ஏறி புளியம்பழம் பறிச்சே,Tamarind exported to over 60 countries; endless benefits from all parts |  Tamarind farming| tamarind export| tamarind benefits| tamarind seed uses

‘ இல்லப்பா நீங்க சொன்னீங்கன்னு’

 அவ்வளவுதான் புளிய மாறு எடுத்து வாங்கு என்று வாங்கிவிட்டார், புலியை மாருல அடிவாங்குற சாட்டை அடி வாங்குவதை விட மோசம் அப்படியே தழும்பு வந்துடும் நிறுத்தாம அடிக்க நான் ஓட அவர் துரத்திப் பிடித்து அடிக்க அது ஒரு ரத்த விளாறு காட்சி மாதிரி ஆயிடுச்சு.

 உடம்பெல்லாம் விண் விண்ணென்று வலிக்கும் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்பா கிட்ட இருந்து புளிய மாறை  ஏதோ தெரியாம நாலு பழத்தை பறித்து விட்டான். அதான் நான் இந்தப்பக்கம் காலை வைக்கக்கூடாது என்று மிரட்டி அனுப்பிட்டேன் இல்ல நீ வேற அடிக்கணுமா’ன்னு கத்திட்டார்.

 என்ன சொன்னே? நாலு பழத்தை பறித்து விட்டான் என்று தானே என் புள்ள கால ஒடிப்பண்ணே . நீ என் மூஞ்சி சாட பார்த்து பேசணும்னு தோணலல்ல .பேசிட்டல்ல. எம் புள்ளைய நாலு பேரு வாய்க்கு வந்த மாதிரி பேச நான் வளக்க விரும்பல. அப்படித்தான் வாழனும் நா பேசாம நான் நாண்டுகிட்டு சாவேன் என்று சொல்லி டேய் அந்தப் பழத்தை போட்டு வாடா என்றார்.எனக்குமட்டும் பளீர்னு உறைக்கல. அந்தத் தோப்பு காரனுக்கும்  உறைத்தது.

 வருஷம் எங்க வீட்டு தோட்டத்திலேயே மூன்று புளிய மரம் வளர்ந்து கிட்டு இருந்துச்சு இல்ல அதுல ஒரு மரம் நல்லா கொத்துகொத்தா புளியம்பழம் காய்ச்சி தொங்கிச்சு.ஆசை தீர மட்டும் எடுத்து சாப்பிட்டேன் நான் பண்ண வேலை மாதிரி எங்க தெரு பசங்க கல்லெடுத்து எறிந்து பழத்த விழவைப்பாங்க. எனக்கு எங்க அப்பா ஞாபகம் வரும் ஒன்றும் சொல்லத் தோணுது பலத்த பொறுக்கி நானே அந்த பசங்களுக்கு கொடுத்து அனுப்புவேன்.அப்படி நிறைய பசங்க புளியம்பழ பழக ஆரம்பிச்சாங்க எங்க அப்பா இதை கண்டும் காணாமல் விட்டு விடுவார்.

 நான் கொஞ்சம் வளர்ந்து ஒன்பதாவது க்கு மேலே படிக்கும்போது பகல்ல புளிய மரத்துக்கு கீழே வைக்கப்பிரி போட்டு படிக்கிறதும் தூங்கறதுமா நாளை கழித்தேன்.புங்கமரம் மாதிரியே புளிய மரத்துக்கு கீழே படுத்தா அப்படி சில்லுன்னு காத்து வந்து தொடும் அக்கடான்னு படுத்து தூங்கலாம் பைவ் ஸ்டார் வெட்டலாம் தொடும் அப்படி ஒரு சுகம் அதுல கிடைக்கும்.

 ஏன் ரோடு ரெண்டு பக்கமும் புளிய மரத்தை வெட்டினால் அது இதுக்குத்தான் அந்தக் காலத்துல பஸ்சை ரயிலா ஒன்னும் இல்ல எல்லாத்துக்கும் நடைபயணம் தான் கால்ல நடந்து தான் போகனும் அப்படி போறவங்க அலுப்பு தீர கொஞ்சம் உட்கார்ந்துட்டு போறதுக்காக தான் புளியமரம் வெச்சாங்க.இப்பதான் அந்த சிஸ்டமே இல்ல ஏதோ பார்க்க பைசா இருக்கிற நெட்டு குத்தல் மரங்களை நட்டு வைத்து வேடிக்கை காமிக்கிறாங்க.

 புளிய மரத்துல ஆக்சிஜன் காத்து பகல்ல அம்புட்டு அழகா வரும் என்ன ஒன்னு ராத்திரியில தூங்க படாது. பேய் மரத்துல உலர்த்தும் வாங்க அதனால புளியமரத்தடி ராத்திரிக்கு தோது இல்லை.ஏன்டா அப்படி சொல்றாங்கன்னு இப்ப சில பேர் கிட்ட விசாரிச்சா விஞ்ஞான கதையை அவுத்து விடறாங்க கேட்க சரியாதான் படுது,

 பகல்ல ஆக்சிஜன் ஹீரோ,ராத்திரி கார்பன் மோனாக்சைடு உற்பத்தி பண்ற வில்லன்,அதான் மூச்சு முட்டும் அதனால பசுமாட்டை கூட ராத்திரியில புளிய மரத்தடியிலே கட்ட மாட்டார்கள்.என்ன கழுதை இந்த விஷயத்தை பேய் மேல போட்டு பயமுறுத்தி ராத்திரி புளியமரத்து பக்கம் யாரையும் அண்டவிடாமல் பார்த்து கிட்டாங்க.

 ஒரு ரகசியம் சொல்றேன் இந்த புளியம் பிஞ்சு இருக்குல்ல அதுல கொஞ்சம் உப்பு இல்லன்னா கொஞ்சம் காரம் தூங்கிட்டு சாப்பிட்டு பாருங்க அப்படி இருக்கும் அதை சாப்பிட்டு அனுபவித்தவர்களுக்கு தான் அதோட அருமை தெரியும். சின்ன வயசு பின் பண்டத்தில் இதுவும் எனக்கு முக்கியமா இருந்துச்சு அப்புறம் பழம் அது வகைவகையா இருக்கும் சிலது தித்திக்கவும் செய்யும்.

 ஒரு தடவை எங்க தெரு கறி வாத்தியாருக்கு தேள் கொட்டிடுச்சு எங்களுக்கு செம ஜாலி ஏன்னா அவர் விளையாடமாட்டார் கைத்தொழில் கற்று கையை மடக்கி பட்டு பட்டுன்னு தட்டுவார். தேர் கொட்டவும் என்ன பண்றது துடைத்து விட்டார் எங்க வீட்டு எதிர்ல இருக்குற மருத்துவச்சி புளிய கொஞ்சம் எடுத்து அதுல சுண்ணாம்பு கலந்து கடித்த இடத்தில் தடவி விட்டார்கள் என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்துல வலி கம்மி ஆயிடுச்சு அப்புறம் நல்லாயிட்டார்.

  அவங்க சொன்னது ஞாபகம் இருக்கு

” புளிக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை புள்ளைக்கு மிஞ்சின பாசமும் இல்லை.

 அதென்னவோ புளியமரம் நிறைய விஷயங்களுக்கு உதவுது.

 வாய்ப்புண்ணும் வருதுன்னு வங்க புலிகள் அந்த தண்ணிய வெதவெதன்னு கொப்பளித்தால் புண்ணு போயிடுது,சாராயம் குடித்துவிட்டு எங்க விழுந்து கிடக்கிறோம் என்று தெரியாமல் விழுந்து கிடந்த தெரிய வைக்கிறது புளிக்கரைசல் குடிக்க வைத்து தான்,

 அட ஏன் எங்க வீட்டில இன்னிக்கும் பாத்திரம் துலக்க இடத்தில கொஞ்சம் புளி கிண்ணத்துல இருக்கும்.ஏன்னா வெள்ளி பித்தளை செம்பு டம்பளர் லாம் புலியை வைத்து தேய்த்தான் பளிச்சுனு இருக்கும் அதுக்கு அவ்வளவு பவர் இருக்கு.

 புளியங்கொட்டை அவிச்சு வேதனை இருக்கும்போது சாப்பிட்டு பார்த்து இருக்கீங்களா நான் சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கேன் எங்களுக்கு அப்போதைய பக்கோடா அதுதான். நல்லாருக்கும்.சில பேரு புளியங் கொட்டையை அரைத்து பாலில்கலந்து சாப்பிடுவாங்க என்னடா இதுன்னு கேட்டா அதுல உயிர்ச்சத்து அதிகம் இருக்காம்,

 எங்க வாத்தியார் பேராசிரியர் நன்னன் எங்களுக்கு ஒருமுறை வகுப்பு எடுக்கும்போது எங்க வகுப்பு காதல் ஜோடிக்கு சொன்ன அறிவுரை

” புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்”

அதென்ன வள்ளுவரும் வாசுகியும் வாங்க இல்லைன்னா நகமும் சதையும் போல ம் வாங்க சிலபேரு வானும் நிலவும் போலாம் வாங்க ஆனால் அண்ணன் இப்படி சொல்றேன்னு தோணிச்சு.அதுக்கு அப்புறம் அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் .புளியம் பழமும்  ஓடும் எப்பவும் ஒட்டாது தனித்தனியா பிரிக்கமுடியும். ஏன் உள்ள கொட்டை கூட பிரித்து எடுத்துவிடலாம். புளி தனியாய் இருக்கும்.

 இது ஒரு தத்துவம் கலந்த சொல் தனித்தனியா குணநலன்கள் ஓடு சேர்ந்து வாழ்தல் என்கிற செய்திதான் அதில் அடங்கியிருந்தது சிலர் இதை ஆன்மீகத்துக்கும் இழுத்துகிட்டு போய் சொல்வாங்க .புளியமரத்தை  கிராமத்துல அவ்வளவு லேசா நினைக்க மாட்டாங்க. ஏன்னா புளியமரம் கெட்டியானது. தாங்கும். அதனால அந்த மரத்தை விக்க மாட்டாங்க. தன்னோட மாட்டு வண்டிக்கு சக்கரம் உலக்கை செய்யறதுக்கு அப்படின்னு வீட்டு உபயோகத்துக்கு வெச்சுப்பாங்க.நீங்க பட்டணத்துல எங்கயாச்சும் பாத்தா தெரியும். கறி வெட்ட அடியில போட்டு இருக்கிற கட்டை புளியமரம் பெரும்பாலும் இருக்கும் ஏன்னா லேசுல அது வெட்ட முடியாது.

 புளிய மரத்தை வளர்க்கிறது கஷ்டமில்லை நாலு வருஷம் தண்ணி ஊத்துற இடத்துல இருந்தா போதும். அப்புறம் அதுக்கு வேணாம். அஞ்சாவது வருஷம் புலி காய்க்க ஆரம்பிச்சுடும் அது நூறு வருஷத்துக்கு காய்க்கும் நல்லா உசரமா என்பது அடி வரைக்கும் மிரட்டலா வளரும். குளிர் பிரதேசத்தில் இது  வளராது,,

 புளியமரம் அடி முதல் நுனி வரை நமக்கு பயன்படும் எப்படின்னா புலி எல்லார் வீட்லயும் அத்தியாவசியத் தேவை, புலி போடாத குழம்பு வச்சு சாப்பிட்டா அவ்வளவுதான், புலியை இலை கொழுந்து பறித்து சாப்பிடலாம், நல்லது, எங்காவது  வீக்கம் வந்தால் புளிய  இலையை வதக்கி இளம் சூட்டில் ஒத்தடம் தந்தா போதும்,அப்படியே அந்த இலையை கட்டிவிட்டார் சீக்கிரம் குணமாகிவிடும்,

 மலேரியா காய்ச்சல் வந்தா அதனோட வீரியம் குறைய அதுக்கு புளியம் இலையை காய்ச்சி அதில் வெல்லம் போட்டு குடிக்கும் பழக்கம் தான் அதனால ரத்தமும் சுத்தமாகும், பாசிப்பயிறு கூட புளிய இலையை வேகவைத்து சாப்பிடறவங்க வலுவா இருப்பாங்க.

 காபி டிகாஷன் ஓட புளிய இலையை கொதிக்க வெச்சு தண்ணி ஊத்தி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சி போயிடும். எங்கயாவது விழுந்து ரத்தம் கட்டிகிட்டு புளி நீருடன் உப்பு சேர்த்து பூசிவிட்டால் குறையும். புளியம்பூ இருக்குல்ல அதுல சேர்த்து துவையல் பண்ணி சாப்பிடலாம் மயக்கம் தலைசுத்தல் வராதும்பாங்க.கண்ணு சிலசமயம் சிவந்திருக்கும். அப்போ புளியம்பூ அரைச்சி  இளம் சூட்டில் பற்றுபோட்டால் சரியா போயிடும்.

 உள்ளங்கை உள்ளங்கால் இதுல ஏதாச்சும் ஆனா ரொம்ப கஷ்டம் தானே அப்போ புளியிலை வேப்பிலை இரண்டையும் கொதிக்க வைத்து காய தடவினால் சீக்கிரம் நல்லா விடும்.இதெல்லாம் சொன்னா பாட்டி வைத்தியம் மாதிரி தோணும். இதெல்லாம் சொல்ல கேட்டு சொல்றது தான்.

 இது பைத்தியம் அறம்தான் புடிச்சாலும் புளியங் கொம்பா புடிக்கணும்னு ஏன் சொல்றாங்க உறுதியான மரமது அதனாலதான் சொல்றாங்க.புளிய மரத்தில் கிளைக்கு கிளை ஏறிக்கிட்டு சத்தம் போடுவதும் பாடுவதும் தனி சுகமான விளையாட்டு.

 இத நான் அனுபவிச்சிருக்கேன்.

 இந்தக் கதையைச் சொன்னதும் என்னோட பேத்தி அமெரிக்காவுல வளருற பொண்ணு. ஆறு வயசு ஆகுது டக்குன்னு கூகுள் தட்டி அவங்களுக்கு தெரிஞ்சது சொன்னாங்க.புளியமரம் மக்னோலியோப்சிடா வகுப்பை சேர்ந்தது.வேஃபேசியே குடும்பம்.இனம் த.இண்டிகா, தமரிண்டஸ் பேரினம். இது இந்தியாவுல புளிப்பு தாய்லாந்தில் இனிப்பு.அதுவும் சரிதான் புலிய பத்தி இதுவாவது சொல்றாங்களே. கடைசில ஒரு கோரிக்கை வச்சாங்க.

” நான் புளியமரம் ஏறனும்!”

 “நான் கூடத்தான்” போலாம் ஒரு நாள்னு இருக்கேன். கொரோனாவினால சின்ன யோசனையாய் இருக்குது

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. அகத்திக்கீரை அனுபவங்கள் : ராசி அழகப்பன்
  5. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  6. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  7. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  8. அரச மரம் :ராசி அழகப்பன்
  9. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  10. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்