முன்பு ஒரு காலத்திலே -14 

சமீபத்தில் நான் கிராமத்துக்கு ஒரு கார்ல போயிட்டு இருந்தேன் .அதை ஓட்டிட்டு வந்த ஓட்டுனர் திடீர்னு ஒரு உயரமான ஒரு மரத்தைப் பார்த்து   சட்டுன்னு  காரை நிறுத்தி  இறங்க அவர்பாட்டுக்கும் நிலத்துல இறங்கி அசந்து பாக்கறார்.

என்னடா இது வம்பா்போச்சுன்னு நானும் கூட போய் நின்னு அவர் பாக்கற திசை பக்கமா பாக்கறேன்.

‘’என்ன சார் இங்க அதிசயமா இருக்கு ‘’

‘’என்னப்பா  எதை அதிசயம்னு சொல்ற‘’அப்படின்னு சொல்றேன்.

அவர் வந்து கையை நீட்டுகிறார் .

நிஜமாகவே ஒரு பெரிய மரம்  நீண்ட உயரமாக வளர்ந்து இருந்தது .அது என்ன சவுக்கு மரமா.. அந்த மாதிரியும் தெரியல.அது என்னன்னு கேட்டேன் . டிரைவர் சொன்னார் ‘’

என்ன சார் கிராமத்துல  வளர்ந்தேன்னு  சொல்றீங்க . இது தான் சார் அகத்திக்கீரை ‘’நான் விளையாடறார்னு நினச்சிட்டேன். அகத்திக்கீரை தானேப்பா அது குட்டையா வயல் வரப்புல இருக்கும். இது உசரமா  இருக்கு.

அதுவுமில்லாம  ஒரு ஏக்கர் நிலத்துல எப்படி? வளர்ப்பாங்க?’’டிரைவர்  கிட்ட போய் ஒரு அமர்ந்து வளச்சி நாலு இணுக்கு கீரை ஒடிச்சி பாருங்க எல்லாம் அகத்திக்கீரைன்னார்.நான் அசந்து போய்விட்டேன்.

எனக்கு பளிச்சின்னு என் மண்டையில்  யாரோ தட்டின மாதிரி இருக்கு .நான் சென்னையில சோழிங்கநல்லூர்ல இருக்கிறேன் .மாவளி அமாவாசை வந்துச்சுனா போதும் எங்க வீட்ல இருக்கிற என் மனைவி அதான் திருமதி காலையில் எழுந்து குளிக்க வைத்து வேட்டி கட்டிட்டு மொதல்ல போயி இந்த பக்கத்தில் இருக்கிற பாம்பன்சாமி கோயில் குளத்தங்கரையில் போயி நின்னு  முன்னோர்களுக்கான வழிபாடு முடிச்சுட்டு வரும்போது வாழைப்பழம் அது கூடவே அகத்திக் கீரையை வாங்கி இரண்டு மாடுகளுக்கு கொடுத்துட்டு வாங்க அதுதான் நல்லது ன்னு கண்டிசன் போடுவாங்க. எனக்கு அதுல உடன்பட இல்லலையா இருக்கான்னு மிரட்டி கேக்காதீங்க.

ஒரு காலத்துக்கு பின்னாடி மனைவி சொல்றதை பெரிசா மறுக்கிறதில்ல.ஏன்னா அவங்க மகிழ்ச்சில எனக்கும் ஒரு அக்கறை இருக்கு.சரி போ ன்னு போய் வந்துடுவேன்.அகத்திக்கீரையை மாட்டுக்கு கொடுக்கறதுல எனக்கு எந்த சங்கடமும் கிடையாது .

என்னன்னா அகத்திக்கீரை அன்னிக்கின்னு கிடைக்கவே கிடைக்காது .ஊரெல்லாம் சுத்துவேன்.

கடைசியில் நொந்துபோய் எங்கடா கிடைக்கும்னு போனா ..குளத்தங்கரையில்  பாட்டிமா தண்ணி தெளிச்சிகிட்டு வித்துகிட்டிருக்கும்.

போய் கேட்டால் கொஞ்சம் தான் இருக்கும் ஒரு கட்டு அகத்திக் கீரை 20 ரூபா ..மூணு கட்டு வாங்கிட்டு போவேன்.. சரி அப்பறம் முறைப்படி செய்ய வேண்டிய சாங்கியம் எல்லாம் செஞ்சிட்டு மூன்று கட்டு கீரை அகத்திக்கீரை கொடுத்து வீட்டுக்கு வருவேன்..

 ஒரு மாதிரி பாப்பாங்க. குடுத்தானா இல்லையான்னு.நான் யாரு? ஒரு இணுக்கு பையில போட்டு கொண்டு வந்து காமிப்பேன். அப்புறம் தான் எனக்கு வீட்டிலேயே மரியாதை சோறு போடுவாங்க ன்னா. பார்த்துக்கங்களேன்.

இப்ப டிரைவர்கிட்ட வரேன்.இந்த அகத்தி கீரையை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா அப்படின்னு நான் கேட்டேன் .ஒரு பத்து மீட்டர் வரைக்கும் அது நல்ல உணரத் வளரும். மத்த மரம் இலைங்க மாதிரி கிளை ங்க அதிகமா கிடையாது .

30-லிருந்து 60 இலைங்க  கூட்டாஇருக்கும்.வயல் வரப்புல கிடக்கும்.இப்ப என்ன ஆச்சுனு அது பெரிய வியாபாரம் .கருத்தா பயிர் வேலை பண்ணிட்டு இருக்காங்க .இது நல்ல வெயில் காஞ்சி  இருக்கிற இடத்துல அது வளருது.இந்தியாவுல எல்லா இடத்திலேயும் அது வளர்ருது.தென் ஆசியாவிலயும் அதிகம் வளர்றதா கேள்விபட்டிருக்கேன்.சரி டிரைவர் கிட்ட ‘முதல்ல நீ காரை கிராமத்திலுள்ளக்கா வீட்டுக்கு   போப்பா அப்படின்னேன். கை கால அலம்பிக்கிட்டு எதிர் வீட்டில் இருக்கிற ஒரு வயசான பாட்டி கிட்ட  போய் சம்மணங்கால் போட்டுகிட்டு கேட்டேன்.

‘ஏன் பாட்டி இந்த அகத்திக் கீரையில் என்ன விசேஷம் ‘அப்படின்னு கேட்டா

‘அடப்பாவி இது தெரியாம இருக்க 63 வகை சத்து இருப்பதாக சித்தர்கள்  சொல்றாங்க.

அதை பயன்படுத்தி முன்னுக்கு வாங்கடா அப்படின்னு சொன்னாங்க .

இதை குழம்புல எல்லாம் போடுவாங்க .

அகத்திக் கீரை ரசம் கூட சாப்பிடுவாங்க .

அவ்ளோதான் எனக்கு தெரியும் மேற்கொண்டு கேட்காத ..’என்று சொல்லி அனுப்பிட்டாங்க.

மனசு தாங்காம-

ஒரு போன் எடுத்தேன் .ஓம்சக்தி டாக்டர் எனக்கு ஞாபகம் வந்தது .

சோழிங்கநல்லூரில் மிகச்சிறந்த டாக்டர் .

காரணகாரியம் சொல்லாம அவர் மருந்து கொடுக்க மாட்டாரு .

அதனால்தான் இங்க நல்ல பெயர் அவருக்கு உண்டு . அவர் கேட்டதும் சொல்ல ஆரம்பிச்சிட்டார்.

‘அவற்றில் விஞ்ஞான சக்தி இருக்கு அப்படின்னு’

சிரிச்சார்.

‘என்ன சார் நீங்களே ஒரு எழுத்தாளர் .

உங்களுக்கே நான் சொல்ல வேண்டி இருக்கு அப்படின்னு  சொல்ல ஆரம்பிச்சார் .

‘8.4 விழுக்காடு புரதச்சத்து இருக்கு

1.4 விழுக்காடு கொழுப்புச் சத்து இருக்கு .

3.1 விழுக்காடு தாது உப்புக்கள் இருக்கு .

அதுமட்டுமில்லாம மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ உயிர்சத்து எல்லாம் இருக்கு .

நாம இத சாப்பிடணும்  எல்லாத்தையும் நாம மறந்துட்டோம்னு சொன்னார் .

எனக்கு ரொம்ப வெட்கமா போயிடுச்சு. நன்றி அப்டின்னு சொல்லி வச்சுட்டேன்.

அப்புறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

1980 ல  தேநீர்னு ஒரு படம் ஊட்டில எடுத்தாங்க .அப்ப நான் ஒரு உதவி இயக்குனர் . அப்ப போகும்போது ஒரு தோட்டக்கலை  நிபுணர் இந்த வெத்தலை பொடி மிளகாய் பொடி இதெல்லாம் வந்து படர்றதுக்கு  பக்கத்தில் அகத்தி மரம் வளத்தத நான் பாத்தேன்.

 எங்க அக்கா எதிர்த்த வீட்ல மருத்துவச்சி ஒருத்தரு இருந்தாங்க . அவங்க அப்ப சொல்லியிருக்காங்க த அப்போ கேக்க மறந்துட்டேன் .ஆனா அதை இப்போ டிரைவர் சொல்லும்போது மண்டைல அடிச்ச மாதிரி ஏறுது.அகத்திக்கீரை ஆமா சார் பயன்பாடு உண்டு அப்படின்னு சொன்னாரு .அதுமட்டுமல்ல எங்க வீட்டு பக்கத்துல இந்த ஆடு கோழி சாப்பிடுறதுக்கு அகத்திக் கீரைய கொடுப்பாங்க.அகத்திக்கீரை இந்த வேத ஆராய்ச்சி இந்த மூட்டுவலிக்கு பயன்படுத்துவாங்க.அகத்திக்கீரை வேர அரைச்சி மூட்டு வலிக்கு பயன்படுத்துறாங்க. அந்த பட்ட , சாருல்லாம்   சிரங்கு குணமாக பயன்படுத்துறாங்க .அகத்தி மரக்குச்சிகள் வந்து கிராமத்துல கூர  வேயற இடத்துக்கு பயன்படுத்துறாங்க .அதுல வர்ற நாருமீன் பிடிக்கிற வலைக்கு பயன்படுத்துறாங்க.இந்தக் கீரையை வந்து தைலமாக கூட பயன்படுத்துறாங்க .இந்த பட்ட ,வேர் இதெல்லாம் கூட மருந்தா ஆவுது.இதை பயன்படுத்துறதுல ஒரு ஆபத்தான விஷயம் இருக்கு .இதிலிருந்து வெடிமருந்து எடுக்குறாங்க.ஆனா இன்னொண்ணு  அந்த மரத்திலிருந்து பொம்மை செய்யறதுக்கு கூட பயன்படுத்துறாங்க .அகத்திக்கீரை அவ்வளவு பயனுள்ளது.

இந்த அகத்தி  கீரைய  அதாவது காய்ங்கள காய்கறிகள் வியட்நாமில சாப்பாட்டுல சேத்து சாப்புடுவாங்க. .நாம தான் வேணாம்னு ஒதுக்கிட்டோம்.’.இந்த அகத்திக்கீரையை வாய்வு கோளாறு இருக்கிறவங்க சாப்பிடக்கூடாது. இத வந்து அடிக்கடி சாப்பிட்டா அது உடம்புக்கு கெடுதி அப்படின்னு சொல்றாங்க..வாரத்துக்கு ஒரு தடவை நாம சேர்த்துகிட்டோம்னு சொன்னா அது நல்லது .ரத்தம் சுத்திகரிக்கும் .உடம்புக்கு வந்து கால்சியம் எலும்பு மூட்டுகள் வலிக்காது.இரத்த ஓட்டம் சுத்தத்துக்கு ரொம்ப நல்லது.அகத்திக்கீரை யோசிக்கும் போது ஒரு பழமொழி ஒருத்தர்  சொன்னது ஞாபகம் வருது.அத இப்ப உங்க கிட்ட வந்து சொல்றேன் .

‘’ஆள தள்ளி வைச்சாலும் வைக்கலாம்

இந்த அகத்திக்கீரையை தள்ளி வைக்கக் கூடாது ‘’

அப்படி என்ன அவ்வளவு ரொம்ப முக்கியமானதா இது.

ஆமா..

எப்பிடி?

கேளுங்க..

யாராவது மது குடிக்கிற பழக்கம் இருந்தாங்கன்னா அதை சாப்பிட்டு அகத்திகீரை சாப்பிடாதீங்க மாரடைப்பு வரும்.கோழிக் கறியை உண்டு இல்லைன்னு சாப்பிட்டு அகத்திக்கீரையை பக்கத்துல போட்டு சாப்பிடலாம் னு நினைக்காதீங்க அதுவும் ஆபத்து. மத்தபடி அகத்திக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது .அப்படித்தான் சித்தர்கள் சொல்றாங்க..என்னென்னா..தொடர்ச்சியா. சாப்பிடகூடாது.விட்டுவிட்டு மாதத்திற்கு நாலஞ்சு முறை சாப்பிட்டால் அது நல்லது .மருத்துவ குணம் கொண்டது அப்படின்னு சொல்றாங்க

ஒரு இலக்கியத்துல ஒரு பாட்டு இருக்கு.

‘’மருந்திடுதல் போகுங்  காண் வன்கிரந்தி- வாய்வாம்திருந்த அசனம் செரிக்கும் வருந்தசகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு ‘’

எப்படி பாட்டுல மருத்துவ குணத்தை எழுதி வச்சிருக்காங்க பாருங்க.ஒரு முறை நிறுத்தி நிதானமா படிச்சு பாருங்க .அர்த்தம் புரியும்.புரியலன்னா யாராவது தமிழ் படிச்சவங்கள கேளுங்க. ஒன்னும் தப்பு இல்ல .தெரிஞ்சுகிறது நல்லது.

அகத்திக் கீரையை சூப் வைத்து குடிக்கலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா தாராளமா குடிக்கலாம்.அது பயனுள்ளதாக சென்னையில் எல்லாம் விக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அகத்திக்கீரையை ஒரு வியாபாரமாக கூட செய்து விற்கலாம். அதுக்கான நிறைய வழிமுறை இருக்கு .என்ன இந்த மருத்துவ தாவரம் அப்படிங்கிற தால இந்த விவசாயிகள் இதை பயன்படுத்திகிட்டா ரொம்ப நல்லது  என்று நான் பரிந்துரைக்கிறேன்.

வழக்கம்போல  என்ன தாத்தா தனியா உக்காந்து இருக்கிறார்  என்று எட்டி பார்த்தாள் .என்னோட பேத்தி .உள்ள போயி கூகுள்ல போய் சர்ச் பண்ணி அதனுடைய விஞ்ஞானப்பெயர்  சொல்ல ஆரம்பிச்சாங்க.

அகத்தி மரத்தினுடைய தாவரவியல் பெயர் :செஸ்பேனியா கிராண்டி ஃப்ளோரா

ஆங்கிலப் பெயர் :வெஜிடபிள் ஹம்மிங் பேர்ட்

சரி இன்னிக்கி ஒரு முடிவுக்கு வந்திடுவோம் .அகத்திக்கீரை பற்றி நினைக்கும்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அப்படிங்கற மாதிரி அகத்திக்கீரை சாப்பிட்டா அவனுடைய உடல் மருத்துவமனையில் தெரியும் அப்படின்னு எடுத்துக்கலாம்’

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனைவிக்குப் பிடித்த சீத்தாப்பழம் : ராசி அழகப்பன்
  2. தங்கர்பச்சான் மூலம் வந்த பலாப்பழம் : ராசி அழகப்பன்
  3. கொய்யாமரம் : ராசி அழகப்பன்
  4. கருவேலமரம்/சீமைக் கருவேல மரம்: ராசி அழகப்பன்
  5. தென்னை மரம் :  ராசி அழகப்பன்
  6. முருங்கை வெறுங்கை அல்ல- ராசி அழகப்பன்
  7. அரச மரம் :ராசி அழகப்பன்
  8. வாழையடி வாழையாக: ராசி அழகப்பன்
  9. பூவரசம்பூ பூத்தாச்சு :ராசி அழகப்பன்
  10. “புடிச்சாலும் புளியங்கொம்பா” : ராசி அழகப்பன்
  11. கொளஞ்சி மரத்தின் கதை : ராசி அழகப்பன்
  12. கொடுக்காப்புளியின் கதை - ராசி அழகப்பன்
  13. புங்கக் காற்றோடு உன் விரலசைய - ராசி அழகப்பன்
  14. பனைமரத்துக் கீழே நின்னு-ராசி அழகப்பன்
  15.  வேப்ப மரத்தின் கதை –ராசி அழகப்பன்
  16. முன்பு ஒரு காலத்திலே (1) –ராசி அழகப்பன்