தமிழுக்கு அப்பால் -8
வந்தே மாதரம்! ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்! வந்தே மாதரம்!
என்ற பாட்டு அகில இந்திய வானொலியில் நாளின் தொடக்கத்தில் ஒலிப்ப தைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இப்பாட்டை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜீ. (சட்டோபாத்யாய என்ற சொல் வங்காளியில் சாட்டர்ஜீ என்று சுருக்கமாக வழங்கப்படும்.) ஆனந்த மடம் என்ற அவரது நாவலின் இடை யில் இப்பாட்டு இடம்பெறுகிறது. இதுதான் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கீதமும் ஆகும். (பின்னர்தான் ஜனகணமன என்பது ஏற்கப்பட்டது.) இப்பாட்டை பாரதியார் இருமுறை மொழிபெயர்த்திருக்கிறார்.
இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
என்று தொடங்குவது பாரதியின் முதல் மொழிபெயர்ப்பு.
1860கள் தொடங்கி வங்கமொழியில் நாவல்கள் எழுதியவர் பங்கிம் சந்திரர். துர்கேச நந்தினி, கபால குண்டலா, மிருணாளினி போன்ற இவரது நாவல் கள் ஆனந்த மடத்திற்கு முன்னாலேயே எழுதப் பட்டவை. இவை தமிழில் 1950களில் த.நா. குமாரஸ்வாமி போன்ற ஆசிரியர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இந்தக் கதை வங்க மொழியில் 1952இல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. ஹேமேந் குப்தா இயக்கியிருந்தார். பிருத்வி ராஜ்கபூர், கீதா பாலி ஆகியோர் நடித்திருந்தனர்.
வங்கத்தில் 1770இல் கடும்பஞ்சம் ஏற்பட்டது. வாரன் ஹேஸ்டிங்ஸ் காலம். அப்போது அங்கே பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து ‘சந்நியாசிகள் எழுச்சி’ ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் கதை நடக்கிறது. கதையின் முக்கியப் பாத்திரம் மகேந்திரன். அவன் ஒரு ஜமீன்தார். பாதச்சின்ன(ம்) என்ற ஊரில் வசிக்கி றான். அவன் மனைவி கல்யாணி. குழந்தை சுகுமாரி. பஞ்சம் ஏற்பட்ட காரணத்தினால் அவன் குடும்பத்தோடு அருகிலுள்ள நகரத்திற்குப் பிழைப்புக்காக இடம்பெயர நேர்கிறது. வழியில் தம்பதியினர் பிரிகின்றனர். கல்யாணி குழந்தையுடன் கொள்ளைக்காரரிடமிருந்து தப்பிக்கக் காட்டுவழி யில் ஓடுகிறாள்.
சத்யானந்தா (கதைத்தலைவர்) கட்டளைக்கிணங்க அவளை ஜீவானந்தா என்பவன் கொள்ளைக்காரரிடமிருந்து காப்பாற்றுகிறான். இடையில் சத்யா வைக் கிழக்கிந்தியக் கம்பெனி சிப்பாய்கள் துரத்துகிறார்கள்.
ஜீவா, குழந்தையைத் தன் தங்கை நிம்மியிடம் விட்டுவிட்டு, கல்யாணியை தங்கள் ஆசிரமமாகிய ஆனந்த மடத்தில் சேர்க்கிறான். அதில் உள்ளவர்கள் ‘சந்தன்’ என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதில் எல்லாருக்கும் ‘ஆனந்தா’ என்ற பட்டம் உண்டு. முஸ்லிம்களைக் கொல்வதையும் நவாபிட மிருந்து வங்க தேசம் விடுதலை பெறுவதையும் கடமையெனக் கொண்ட வர்கள். (அக் “கடமைக்கு” ஆங்கிலேயர் இடையூறாக இருப்பதால் அவர்க ளை எதிர்க்கிறார்கள்).
மகேந்திரனும் சந்நியாசிகள் கூட்டத்தில் சேர்ந்து வங்க “விடுதலை”க்காகப் போராட முனைகிறான். தற்செயலாக அவனும் ஆனந்த மடத்திற்கே வந்து சேர்கிறான். கணவன்-மனைவி இருவரும் இணைகின்றனர். சத்யாவின் கட்டளைப்படி மகேந்திரனின் சொத்து ஆனந்தமடத்திற்குப் போர்க் கருவி செய்யும் ஆலையைத் தொடங்கப் பயன்படுகிறது. ஏற்கெனவே மடத்தில் இருக்கும் பவானந்தா, ஒரு சிறந்த வீரனாகவும் சந்நியாசிகள் படைக்குத் தலைவனாகவும் இருக்கிறான்.
நிம்மியுடன் சாந்தி என்றபெண் இருக்கிறாள். அவள் அநாதை, வீராங்கனை, பிரம்மச்சாரிணி. ஜீவானந்தாவைக் காதலிக்கிறாள். சந்நியாசிகளின் படை யில் சேர விரும்புகிறாள். ஆனால் சத்யா அவளைத் தடுக்கிறார். சத்யா, ஜீவா, பவா, ஞானா முதலிய நான்கு பேர் மட்டுமே கையாளக்கூடிய ஒரு பெரிய வில்லை அவள் எளிதாகக் கையாளுவதால் சத்யா அவளைப் படையில் சேர அனுமதிக்கிறார்.
சத்யா, மகேந்திரனுக்கு மாதாவின் மூன்று வடிவங்களை ஆசிரமத்தின் அடுத்தடுத்த மூன்று அறைகளில் காட்டுகிறார். முதல் வடிவம், எப்படி அவள் இருந்தாள் என்பது (ஜகதாத்ரி). நடுஅறையில் இருப்பவள், இப்போது எப்படி இருக்கிறாள் என்ற வடிவம் (காளி). மூன்றாவது அறையில் இருப்ப வள், இனிமேல் எப்படி இருக்கப் போகிறாள் என்ற வடிவம் (துர்க்கை).
கொஞ்சம் கொஞ்சமாகச் சந்நியாசிகளின் பலம் பெருகுகிறது. ஆட்கள் நிறையப் பேர் ஆனந்த மடத்தில் சேர்கிறார்கள். அதனால் மடத்தை ஒரு சிறிய கோட்டைக்கு இடம் பெயர்க்கிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியினர் அந்தக் கோட்டையைத் தாக்குகிறார்கள். கோட்டையினுள் பவானந்தாவுக் குத் துணையாக ஜீவானந்தாவும் சாந்தியும் இருக்கின்றனர்.
அவர்களிடம் போர்த் தளவாடங்கள் மிகுதியாக இல்லை. சந்நியாசிகளுக்குப் படைப்பயிற்சியும் கிடையாது. எனினும் கோட்டையைச் சுற்றி ஓடிய நதி யை அரணாக வைத்து கம்பெனிச் சிப்பாய்களைத் தடை செய்கிறார்கள். நதியைக் கடந்து கோட்டைக்குள் வர ஒரு பாலம் இருக்கிறது. பாலத்திற் குள் புகுந்துவிட்ட கம்பெனிச் சிப்பாய்கள், பின்வாங்கிச் செல்வது போல் நடிக்கிறார்கள். அதை நம்பிய சந்நியாசிகள் கும்பல், கோட்டைக் கதவைத் திறந்துகொண்டு பாலத்தில் முன்னேறி வருகிறது. உடனே கம்பெனிச் சிப்பாய்கள் பீரங்கியால் அவர்களைச் சுடுகிறார்கள். சந்தியாசிகள் தரப்பில் பெரிய இழப்பு ஏற்படுகிறது. பவானந்தா இறந்துவிடுகிறான்.
இருப்பினும் ஜீவா தலைமையிலான படை கம்பெனிச் சிப்பாய்களின் ஆயு தங்களைக் கைப்பற்றி அவர்களைத் திருப்பிச்சுடுகிறது. இதனால் கம்பெனிச் சிப்பாய்கள் பின்வாங்கி ஓடுகின்றனர். இப்படியாக கலகப் படையினரின் முதல் தாக்குதல் முடிகிறது. போரில் ஜீவாவுக்கு பலத்த காயம் ஏற்படுகி றது. சத்யானந்தா கொடுத்த ஒரு மூலிகையைக் கொண்டு அவன் காதலி சாந்தி, ஜீவாவைக் காப்பாற்றுகிறாள். போரின் இறுதியில் ஜீவாவும் சாந்தி யும் காட்டுக்குச் சென்று துறவித் தம்பதிகளாக வாழ்வதாக முடிவு செய்கின்றனர்.
கதை இறுதியில் சத்யானந்தா தன் குருவிடம் பேசுகிறார்:
சத்யானந்தா: நான் எதிரியின் இரத்தத்தால் தாய்நாட்டின் மண்ணை நனைத்து அதை வளப்படுத்துவேன்.
குரு: யார் உனக்கு எதிரி? இங்கே பகைவரே இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியமைப்பதற்கு உதவிசெய்து உன் கடமையை முடித்துவிட்டாய். அவர்கள் நமக்கு நண்பர்கள். மேலும் நீண்டநாள் பிரிட்டிஷ்காரர் களை யாரும் எதிர்த்துச் சண்டை போட முடியாது.
இக்கதை, சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களுக்கு அக்காலத்தில் பெரிய உத் வேகமாக அமைந்திருந்ததாம்! காரணம், இதில் வங்கநாட்டின் விடுதலை என்பதில் “இந்து”க்கள், சந்நியாசிகள் முன்னணிப் படுத்தப்படுகிறார்கள். முஸ்லிம்கள் எதிரிகள். ஆங்கிலேயர் “நண்பர்கள்” ஆகிவிட்டார்கள்!
‘தாய்’ எனச்சொல்லும் இடங்களில் எல்லாம் பங்கிம், இந்தியத் தாயை அல்ல, வங்கத் தாயைத்தான் குறிக்கிறார். “சுஜலாம்” பாட்டில் அக்கால பிளவுபடாத வங்கத்தின் மக்கள் தொகையான ஏழுகோடி பேருக்குத் தாய் அவள் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார். பாரதியார் போன்ற சுதந்திரப் போர்வீரர்கள் பிற்காலத்தில் அச்சொல்லைக் “கோடிகோடி மக்களின் தாய்” எனத் திருத்தி ‘இந்தியத்தாய்’ ஆக்கினார்கள். ஓர் ‘இந்து’ நாவலை ‘இந்தியச் சுதந்திர நாவல்’ ஆக்கிவிட்டார்கள்.
“வங்கத் தாய்க்குச் சுதந்திரம் வேண்டும்” என்பதற்கு பதில், “தமிழ்த் தாய்க் குச் சுதந்திரம் வேண்டும்” என்று எவரேனும் அக்காலத்தில் எழுதியிருந் தால் அது எப்படிக் கருதப்பட்டிருக்கும்? என்ன இருந்தாலும் ‘மாமியார்’ பார்வையில், தமிழ்த்தாய், இந்தியத்தாய் ஆக முடியுமா?
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- விசாரணை – க. பூரணச்சந்திரன்
- பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
- ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
- இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
- பரஜன் - க. பூரணச்சந்திரன்
- வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
- மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
- கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
- சூளாமணி – க. பூரணச்சந்திரன்
- மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
- விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
- வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
- மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
- உடோபியா - க. பூரணச்சந்திரன்
- பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
- ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
- நீலகேசி - க.பூரணச்சந்திரன்
- சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
- பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
- ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
- மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
- பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
- நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
- விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
- குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
- சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
- ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
- ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
- சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
- அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
- பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
- செம்மீன் : க.பூரணச்சந்திரன்
- ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
- ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
- கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22) : க.பூரணச்சந்திரன்
- புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
- மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
- வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
- ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
- விசித்திர உலகில் ஆலிஸ் : க.பூரணச்சந்திரன்
- காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
- கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
- ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
- பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
- அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
- ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
- ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன்
- தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்