கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 14

07/04/2020, செவ்வாய்

காலை மணி 10 : 00

ஆழ்ந்த பெருமூச்சுடன் இந்த இரண்டாம் வார முடிவை, நாள்காட்டித் தாள்களைக் கிழித்து நிறைவு செய்தேன் !

உண்மையிலேயே நாட்டின் நிதிச்சூழல் பேராபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை நடுவண் அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரு வருடங்களுக்கு நிறுத்தி வைப்பதாகச் சொன்ன அறிவிப்பிலிருந்து தெரிந்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும், நாட்டில் ஐம்பது முதல் அறுபது விழுக்காட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கான சம்பாத்தியம் அடியோடு குலைந்திருப்பதுதான் கலக்கத்தை அதிகரித்திருக்கிறது !

முகமூடி தரித்து, தனி மனித இடைவெளி கடைபிடித்து, உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் கடைவீதிகளில் ஒரு மதிய உலா போய் வாருங்கள்.  ஆளரவமற்ற அந்த வெளி,  அச்சமூட்டும் அந்த நிசப்தம், உங்களை ஏதோ செய்யும் !

வரப்போகும் காலங்களில் நம் நாவின்  கனவில் மட்டுமே தேன் ருசி மிஞ்சியிருக்கும், அது தொடர்ந்து அருந்தவிருப்பது வேம்புச் சாற்றை மட்டுமே !

நண்பகல் 12 : 00 மணி

தெலுங்கானா முதல்வர் ஊரடங்கை மேலும் நீட்டித்துவிட்டார் என்கிற பரபரப்பு சேதி ஓடிக்கொண்டிருந்தது.  ஆனால் வெகு வேகமாக அதை  தெலுங்கானா அரசு மறுத்து, வெறும் யோசனையாக மட்டுமே அது உள்ளதாகச் சொன்னது.  அவர்கள் மட்டும்தான் அப்படி செய்ய முடியுமா, நாங்களும் செய்வோமில்ல என்றபடி, நம் அரசு சிமெண்ட், ஜவுளி, கண்ணாடி, மின் உற்பத்தி, சர்க்கரை ஆலைகள் உட்பட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட உடனடி அனுமதி என்றுவிட்டு உடனுக்குடன் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது !

அந்திமாலை 06 : 00

இதுதான் இப்போது நம் அரசுகள் செயல்படும் நிலை.  மாநில அரசுகளை விட, நடுவண் அரசு அறவே கையாலாகா நிலையில் வாளாவிருக்க, நம் அரசு நிச்சயம் அவர்களை விட, முன்னவர்கள் கட்டமைத்திருக்கும் நிர்வாகத்திற்கேற்ப சற்று சிறப்புடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் !

அதுவுமில்லாத மாநிலங்களின் நிலையை கற்பனை கூட செய்ய முடியாது.  நமக்கு இதெல்லாம் பின்னால் தெரியவரும்.  அதிலும், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் இந்தக் கொரோனா காலக் கொடூரக் கதைகள் பலவற்றை நாம் கேட்க நேரும் !

பின்னிரவு மணி 10 : 50

ட்ரம்ப், இந்தியாவுக்கு அளித்த ஒரு வார்த்தைப் பதில்தான் இன்றிரவு விவாதத்திற்குள்ளானது.

பலவீனமான நிலையிலிருக்கும் ஒரு நாட்டை, இப்போது நாம் பழிவாங்க எண்ணக்கூடாது, அதற்காக வாய்த்துடுக்குடன் ஓர் அதிபர் உளறினால், குறைந்தபட்சம் அதற்கான பதிலடியையாவது எதிர்வினையாக இந்தியா கொடுத்திருக்க வேண்டும் !

ஆனால், வலுத்தவன் மிரட்டினால் காலில் விழும் வீரப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாட்டை ஆளும்போது, அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதல்லவா ?

மக்களுக்கு இந்த ஏமாற்றம் சகிக்க முடியாமலிருக்க, வெங்கடேஷ், பத்ரி போன்ற மென்சங்கிகள், இந்த அவலத்தையும், ” மோடியின் சாதுர்யமாக பார்க்கிறோம் ”  என விழுந்தே விட்டார்கள் !  விழுந்தாத்தான் சோறுன்னா அவர்களும் என்ன செய்வார்கள், பாவம் !

 

தொடரும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்