கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 34

27/04/2020,  திங்கள்

மதியம் மணி 02 : 00

டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கி இருக்கிறது.  கொரோனா பரிசோதனையை துரிதமாக அறிந்துக் கொள்ள உதவும் சாதனங்களை என்ன  விலைக்கு விற்கவேண்டும், யார் விற்க வேண்டும் என்பது தொடர்பான, இரு தனியார் மருந்துக் கம்பெனிகளுக்கிடையேயான பிரச்சினை அது !

ஏற்கனவே சட்டீஸ்கர் மாநில விலைக்கும், தமிழகம் வாங்கியிருக்கும் விலைக்கிடையேயான வித்தியாசமே 250 ரூபாய்க்கும் மேலிருந்ததை, ஏற்கனவே பேசித் துப்பிவிட்டோம் !

இருந்தாலும் அது துல்லியத் தரவுகளாக வெளிப்படும் போதுதான்  எப்படி எரியும் வீட்டில் பிடுங்கித் தின்கிறார்கள் எனப் புலப்படுகிறது.  வெறும் மூன்று அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் அதிகபட்சமாக ரூ.225 + செலவு + வரிகள் என வைத்துக்கொண்டாலும், ரூ.400 க்கு விற்றாலே, நல்ல லாபம் கிடைக்கும்.  எனவே 400 ரூபாய்க்கு மேலே விற்கக் கூடாது என தீர்ப்பளித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.  ஆனால் 600 + 72 வரிகள் என கிட்டத்தட்ட 100 விழுக்காடு அதிக விலை கொடுத்து வாங்கி, பாதிக்கு பாதி லவட்டியிருக்கிறது தமிழகம்.  கேட்டால் அது நடுவண் அரசு பரிந்துரைத்த விலை, எங்களுக்கேதும் தெரியாது.  போக, நாங்க வாங்கின அனைத்துச் சாதனங்களையுமே ரிட்டன் அனுப்பப் போறோமாக்கும், எப்படி ஊழல் செய்ய முடியுமென தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் !

இந்த வழக்கு பற்றிய முழுமையான விவரங்களை திரு. முரளிதரன் அவர்கள் BBC க்காக எழுதியுள்ள கட்டுரையில் வாசித்துத் தெரிந்துக் கொள்ளலாம்.  தொடர்வது அதற்கான லிங்க்.

( BBC News தமிழ் | கொரோனா வைரஸ்: மிகக் கூடுதலான விலைக்கு இந்தியாவுக்கு விற்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் – என்ன நடந்தது? – https://www.bbc.com/tamil/india-52440915?ocid=wstamil.chat-apps.in-app-msg.whatsapp.trial.link1_.auin )

மாலை 06 : 30 மணி

எதிர்பார்த்த அந்த சோகச் செய்தி வந்தே விட்டது.  கோயம்பேடு காய்கறிச் சந்தையிலிருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது.  எப்படி ?

எடுத்தேன் கவிழ்த்தேன் சட்டக் கெடுபிடிகளால், தனி மனித இடைவெளி, பாதுகாப்பு கவசங்களை மீறிக் கூடிய பெருங்கூட்டத்தினால் எதிர்பார்த்து நிகழ்ந்தேறிய அவலம்தான்.   ஐ ஏ எஸ், ஐ பி எஸ்களெல்லாம் ஓடோடிப் போய் என்ன செய்வது என்று இன்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் !

ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ளே இருக்கிறோம்.  10 விழுக்காடு மக்களைத் தவிர மீதம் 90 விழுக்காடு மக்கள், தொற்று பரப்பவே வாய்ப்பற்றச் சூழலில் முடங்கிக் கிடப்பவர்கள்.  பத்து விழுக்காடு மக்களில், ஓரிரு விழுக்காட்டு மக்களைத் தவிர எஞ்சியவர்கள் பாதுகாப்புடன் வளைய வந்தவர்கள்.  இப்படி இருக்கையில், தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையாமல், அதிகரித்துக் கொண்டே போவது எப்படி ?

டெல்லிக்கு போய் வந்த சிங்கிள் சோர்ஸ் மனிதர்களெல்லாம், பிளாஸ்மா ஈந்து புனிதர்களாகி விட்டனர்.  எனில் யாரால் இப்போது இந்த நோய் பரவிக் கொண்டிருக்கிறது ?  இதுபற்றித்தானே சுகாதாரத் துறை செயலாளரோ, அமைச்சரோ, முதல்வரோ நமக்கு விளக்க வேண்டும்.  ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் நேரலையில் பேசக் கூட விரும்பவில்லை !

இதற்கெல்லாம் அவர்களிடம் இருக்கும் எளிதான ஒரே தீர்வு, ஊரடங்கு, ஊரடங்குக்கே ஊரடங்கு, ஸ்பெஷல் ஊரடங்குக்கு ஒரு144 அவ்வளவுதான்.  எவன் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன ???

 

தொடரும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்