கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 28

21/04/2020, செவ்வாய்க்கிழமை

காலை மணி 10 : 00

ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப்பார்த்தேன்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேர் பனிப்போர்வை.  சிலீர் குளிர்காற்று முகத்திலறைந்து மிரட்டியது.  சித்திரை மாத சென்னை இவ்வளவு ரம்மியமாக மாறுமென வெதர்மென் ஒரு பதிவு கூட இடவில்லை !

எதேச்சையாக டிவிட்டரை எட்டிப்பார்த்த என் கண்களில் அடுத்தடுத்து பட்டது நாராயணன் திருப்பதி அவர்களுடைய பதிவும், எஸ்.வி. சேகர் அவர்களுடைய பதிவும்தான் !

மரபில் குறையிருந்தாலொழிய வேம்பு இனிக்காது என்றார் பெரியார்.  சனாதனம், சாஸ்திரம், வர்ணாஸ்ரமம் என்கிற மரபு பிறழாமல் அழுக்குடன் பிறந்தவர்கள் அவர்கள்.  வேம்பு என்பது அருமருந்து.  இவர்களை அத்தோடு ஒப்பிட முடியாது.  பொட்டாசியம் சயனைட் எனலாம் !

பொதுவாக சிறுபான்மையினர் மேல் விஷத்தைக் கக்கும் இவர்களின் பதிவு, இன்று என் ஜன்னலுக்கு வெளியே நான் கண்ட காட்சிப் பிழைக்கொப்பாகவே இருந்தது.  ஊநீர் எனப்படும் ரத்த பிளாஸ்மாக்களை தானம் தர, இஸ்லாமியர்கள் முன் வந்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார்கள் !

அந்தப் பதிவுகளின் நோக்கம் நல்லிணக்கத்துக்கோ, நன்றி நவில்தலுக்கோ அன்று.  திரும்பத் திரும்ப தமிழகத்தில் கொரோனா தொற்றைப் பரப்பியவர்கள் இஸ்லாமியர்கள் என்று தாம் சொன்ன பொய்களை, அழுந்த மெய்ப்பிக்கவே, இந்த நற்செயலையும் தங்களுக்கு வாகாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  சர்க்கரையைப் போல் தென்படும் சயனைட் துகள்கள் !

அரபு நாடுகளில் பணிபுரியச் சென்ற பல வடநாட்டு மற்றும் சங்கிகள், இங்கு நீண்ட இடைவெளிக்குப் பின்பு தனி பலத்துடன் பீ ஜே பீ ஆட்சியைப் பிடித்தவுடன், முன்னர் வெற்றிக்காக அள்ளிவிட்டப் பொய்களை தாமே நம்ப ஆரம்பித்துவிட்டனர்.  அதாவது மாபெரும் சக்திமான் நம் நாட்டை ஆள வந்துவிட்டார்.  இனி நம்மை யார் என்ன செய்யமுடியும் என்கிற இறுமாப்பில், இஸ்லாமியர்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட ஆரம்பித்தனர் !

இறைத்தூதர் நபிகளைப் பற்றி வெளிப்படையாக கீழ்மை படுத்துவது, ஷரியத் சட்டங்களை கேவலப்படுத்துவது, கஷ்மீர் கட்டுப்பாடுகளைக் கொண்டாடுவது, CAA, NRC, NPR போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவது, வடகிழக்கு தில்லி கலவரங்களை கைதட்டி ரசிப்பது, தப்லிக் மாநாடு பற்றிய அரசு பொய்களை அப்படியே வழிமொழிவது என பேயாட்டம் ஆடினார்கள் !

மிகச்சரியாய், இந்த ஓய்வுவேளைகளில் அத்தகையப் பதிவுகளையெல்லாம் ஆழம் போய் நோண்டியெடுத்திருக்கின்றன பல அரபு நாடுகள்.  விளைவு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள்  நடுங்க ஆரம்பித்துவிட்டனர்.  சவர்க்கார் வழியில் பலர் மண்டியிட்டு மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்ததோடு, தங்கள் பக்கங்களை டிஆக்டிவேட்டும் செய்துவிட்டனர்.  இன்னும் பல விஷமிகளுடையப் பதிவுகளும் ஆதாரங்களுடன் அரபு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டே உள்ளது !

அந்திமாலை மணி 06 : 00

கோவிட் 19 ற்கான துரித பரிசோதனைக் கருவிகளின் கொள்முதல் எண்ணிக்கையில் துவங்கிய குழப்பம், அதன் விலை, தாமத வருகை எனத் தொடர்ந்து சொதப்பி, இறுதியில் அது சோதிக்கத் தகுதியற்ற ஒரு சாதனம், எனவே இன்றிலிருந்து மேலும் இரண்டு நாட்களுக்கு, அதில் எந்தப் பரிசோதனைகளையும்  மேற்கொள்ள வேண்டாம் என ICMR  உத்தரவிட்டிருக்கிறது !

மாநில அரசுகள், அவர்கள் விருப்பத்திற்கேற்ப இத்தகைய உபகரணங்களை இறக்குமதி செய்யக்கூடாதென்றும், தாங்களே வாங்கி பகிர்ந்தளிப்பதாகவும் சொல்லித்தான், இதற்கான ஒரு சீன நிறுவனத்தை தேர்ந்தெடுத்து,  600 ரூபாய் + 12% GST தனி என விலையையும் நிர்ணயித்து, பின் அதைக்  கொள்முதல் செய்து, லட்சக்கணக்கில் எதிர்பார்த்த மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கில் பங்கு போட்டுக் கொடுத்தார்கள் !

முதல் எதிர்ப்புக் குரல் ராஜஸ்தான் அரசிடமிருந்து எழுந்தது.  5% கூட சரியானத் தகவலைத் தராத சொதப்பல் சாதனம், இதில் பரிசோதனைகள் செய்வதை நிறுத்துகிறோம் என்றது.  பிறகுதான் இதை ICMR ஏற்றுக்கொண்டது !

ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் முதல் தொற்று வந்துவிட்டது.  மார்ச் தொடங்கியவுடன் இங்கு மரணங்களும் சம்பவிக்க ஆரம்பித்துவிட்டன.  நாங்கள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என வாயால் வடைகளை மட்டும் சுடத் தெரிந்த நடுவண் அரசுக்கு, இத்தனை நாட்கள் கழித்து வாங்கும் ஓர் அதிமுக்கியச் சாதனத்தை உருப்படியாய் ஆராய்ந்து வாங்க முடியவில்லை !

வடிகட்டியத் தத்திகள் நாட்டை ஆளும்போதுதானா இது போன்ற கொள்ளை நோய்களெல்லாம் நாட்டைத் தாக்க வேண்டும் ?  கொள்ளை நோய் அடுத்து கடும் பொருளாதார நெருக்கடியையும், குழப்பங்களையும், சூறையாடல்களையும் கொண்டுவருமே ?  எப்படி கடக்கப் போகிறோம் ??

 

தொடரும்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்