கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 25

18/04/2020,  சனி-  காலை மணி 10 : 00

சேலத்தில் தனிமனித இடைவெளியின்றி கூட்டம் சேர்த்து பொறுப்புடன் பேட்டியளித்துக் கொண்டிருந்த தமிழக முதல்வரைப் பார்த்து மெய் சிலிர்த்தது.  நிருபர்கள் ஸ்டாலின் என்கிற பெயரை உச்சரித்ததுமே உடல் நடுங்குமளவு கோபம் கிளர்ந்து அது அவருடைய பேச்சில் கொப்பளித்தது !

” இது போன்ற ஓர் அவலச்சூழலிலும் எதிர்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார், அவருக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை ”  என்று கொந்தளிக்கிறார் !

ஆனால் ஸ்டாலின்,  ” கொரோனோ துரித சோதனைச் சாதனங்களை எவ்வளவு வாங்கினீங்க, என்ன விலைக்கு வாங்கினீங்க, எத்தனை இப்ப வந்திருக்கு, மிச்சம் எப்ப வரும், வருமா வராதா ? ”  என இடைவிடாமல் அரசைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தார் !

பிற்பகல் மணி 01 : 00

மதியம், சட்டீஸ்கர் அமைச்சர் திரு. T. S. SINGH அவர்கள் போட்ட ட்வீட் ஒன்று, முற்றிலும் இந்த விவாதத்தை வேறுபக்கமாய்த் திருப்பிவிட்டது.  75000 துரித பரிசோதனைச் சாதனங்களை தென் கொரியாவிலிருந்து சட்டீஸ்கர் மாநிலம் வாங்கியிருக்கிறது.  ஒரு சாதனத்தின் விலை ரூ.337 + 12% GST.

நம்மாட்கள் ஒரு லட்சத்தில் ஆரம்பித்து நாலு லட்சம் வரை இந்தச் சாதனங்களை சீனாவிடமிருந்து வாங்கி விட்டதாகவும் அது இப்போ வருது அப்போ வருது எப்போ வருது என்று அவர்களுக்குள்ளாகவே குழம்பி, இறுதியில் இன்று வந்து சேர்ந்ததென்னமோ வெறும் 12000 சாதனங்கள் !

ஒருவருக்கு ஒரே முறை மட்டும் பார்க்கப்பட்டு எறியப்படவிருக்கும் இந்தச் சாதனங்களை, ” என்ன விலை கொடுத்து வாங்கினீர்கள் ” என ஸ்டாலின் எழுப்பியக் கேள்வியையே மாலையில் நிருபர்களும் விஜயபாஸ்கரை நோக்கிக் கேட்க,

” அதுக்கென்ன அதை உமாநாத் I A S சொல்வார் ” என்று லைட்டை அவர்பக்கமாகத் திருப்பிவிட,

உமாநாத்தோ, ” ரேட்ல என்னங்க இருக்கு, மத்திய அரசு ஃபிக்ஸ் பண்ண ரேட்டுக்குத்தான் வாங்கினோம் ” என்றாரே ஒழிய கடைசிவரை இவர்கள் என்ன விலைக்கு எத்தனை சாதனங்களை வாங்கினார்கள் எனச் சொல்லவேயில்லை !

இறுதியில் 50000 சாதனங்களை தலா 600 + 12% GST என விலை நிர்ணயித்து, மூன்று கோடியே 36 லட்ச ரூபாய்களுக்கு ஏப்ரல் ஆறாம்தேதி சென்னையிலிலுள்ள மருந்துப் பொருட்களை சப்ளை செய்யும் ஒரு நிறுவனம் மூலம் வாங்கியிருக்கிறார்கள்.  தென் கொரியாவை விட விலை குறைவாகத் தரவல்ல சீனாவிடம் இவர்கள் 230 ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கியதோடல்லாமல், செய்த ஆர்டரில் பாதி கூட வந்துசேரவில்லை !

இதுல நடந்த ஒரு கேலிக்கூத்தப் பாருங்க, நாட்டு பொது மக்களுக்கு தேவையான அதி அவசியச் சாதனங்களின் வணிகத்தில் கூட தன்னுடைய 12% வரியை, நடுவண் அரசு விட்டுக்கொடுக்கவில்லை !

சீனாக்காரனோ, கொரியாக்காரனோ பேசியது நிகர விலையைத்தான்.  அவனுக்கும் GST. க்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.  ஆக, GST தொகையான 36 லட்சங்களை செலுத்தியது யார் ?  தமிழக அரசு.  அது யார் பணம் ?  நம்ம பணம்.  யாருக்குப் போகுது ?  அள்ளிக் கொடுங்க என்று கேட்டால் கிள்ளிக் கொடுக்கக் கூட மனமில்லாத மோடி அரசாங்கத்துக்குப் போகுது.  அதனால்தான் இரக்கமற்ற மூட அரசு நம்மை ஆண்டுக்கொண்டிருக்கின்றன என பொழுதன்னிக்கும் கதறிக் கொண்டிருக்கிறேன் !

அந்திமாலை மணி 06 : 30

ஆக, நடுவண் அரசோடு சேர்ந்துக்கொண்டு மாநில அரசு கொரோனா துரித பரிசோதனைச் சாதனத்தில் செமயாக லவட்டியிருப்பது புரிகிறது.  ரஃபேல் போர் விமானங்களின் கொள்முதலிலேயே பல்லாயிரம் கோடி சுருட்டியக் கம்பெனி விலை நிர்ணயித்தால் இப்படித்தானே இருக்கும் ?  என்ன அவல நகைச்சுவைன்னா இவர்கள் ஊழலைப் பற்றி நம்மிடையே பேசிப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள்.  அந்த ஏமாற்றத்தைத்தான் சகிக்க இயலவில்லை.  போய்த் தொலையுது, நாளையோட கொரோனா தமிழகத்திலிருந்து வேறெங்கனா போயிடும்ன்னு முதல்வர் வாக்கு கொடுத்திருக்காரு.  குறைந்தபட்சம் கொரோனாவாவது அவர் சொல்பேச்சைக் கேட்டுத் தொலையட்டும் !

இரவு மணி 09 : 00

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கேரளத் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை சீர்படுத்திய மருத்துவர்கள், இன்று அவர்களை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள்.  இது ஒரு சாதாரண சேதிதானே ?  ஆனால், இங்கு இருப்பிடமில்லாத அந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்.  அவர்களுக்கு நோய் தொற்றில்லை.  எனவே இங்கிருக்கும் உறவினர்களிடம் விட்டு அவர்கள் அவர்களை பராமரிக்கப்பட வேண்டும்.  அப்படி யாருமே அவர்களுக்கில்லை என்பதால், நிலையை உள்வாங்கிய மருத்துவர்களும், செவிலியர்களும் ஒரு துணிச்சலான முடிவையெடுக்கிறார்கள் !

ஆமாம், தங்களுடைய அறையிலேயே அந்தக் குழந்தைகளை பதினைந்து நாட்களுக்கும் மேலாக பராமரித்து, அதாவது உணவு, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, துணிவு என அனைத்தையும் ஊட்டி, இன்றுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குணமானத் தங்களின் தாய் – தந்தையைரை பார்க்கச் செய்திருக்கிறார்கள் !

திறனற்ற ஆட்சியாளர்களின் அழுக்கான பல செயல்களுக்கிடையே, தங்கள் உயிரை பணயம் வைத்து சேவையில் ஈடுபடும் இவர்கள், அத்தோடு இதுபோன்ற அரிய பண்புகளையும் காட்டுவதால் மட்டுமே இயற்கை நம்மைப் போற்றிப் பாதுகாக்கிறது.  அதான் சார் இவர்கள் சொன்னால் பெய்யெனப் பெய்யும் மழை !!!

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்