கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்

நாள் # 10

03/04/2020 வெள்ளிக்கிழமை

காலை மணி 09 : 10

‘’ஏங்க ஏங்க எழுந்திருங்க, உங்க காமெடி பீஸ் பேசுது.’’

‘’ப்ச் எடப்பாடியா ?’’

‘’இல்ல பெர்சு’’

‘’ஓ என்னவாம் ?’’

‘’வெளக்கு புடிக்கணுமாம்.’’

‘’த்தூ, வெள்ளிக்கிழம அதுவுமா ஒரு குடும்பக் குத்துவிளக்கு பேசுற பேச்சா இது ?’’

‘’அப்ப சனிக்கிழம பேசலாமா ?  வந்து இந்தக் கருமத்தப் பாத்துட்டு போய் துப்புங்க !’’

 

காலை மணி 09 : 20

வாயைக் கொப்பளித்துவிட்டு வருவதற்குள் அவர் டிவியில் உரையாறிவிட்டுப்போயிருந்தார்.  நாட்டின் முதன்மை அமைச்சரின் பேச்சை மறு ஒளிபரப்பில்தான் முழுவதும் கேட்டேன்.  இவ்வளவு அருவருப்பான ஒரு பேச்சை உலகின் எந்த நாட்டு தலைமை அமைச்சராலும் மக்களிடையே பேசியிருக்க முடியாதென்பதே என் துணிபு !

இந்தியாவின் முதன்மை அமைச்சர்களில் யார் அதிக திறமைசாலி என ஒரு போட்டி வைத்தால், அதில் நேரு, இந்திரா, நரசிம்மராவ், மன்மோகன் என காங்கிரஸ் ஆட்களுக்கிடையேதான் பெரும்போட்டி இருக்கும்.  இந்தப் பட்டியலில் ராஜிவ், வாஜ்பாய் கூட இறுதியில் இணையலாம்.  ஆனால் மோடி ?

இந்தியா கண்ட இனி என்றும் அது காணப்போகா மிக மோசமான முதண்மை அமைச்சர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள்தான்.  இத்துணை கோமாளித்தனமிக்க ஆட்சியை, நிர்வாகத்தை, அறிவிப்புகளை இருபத்தி மூன்றாம் புலிகேசி கூடச் செய்ததில்லை !

சாதிச் சண்டைக்கென திடல் கட்டி, பரிசுகளை அறிவிக்கும் புலிகேசியையும் விஞ்சி, கொரோனாவுக்கு எதிராகப் போராட விளக்குப் பிடிக்கச் சொல்லியிருக்கிறார், அதுவும் ஒன்பது நிமிடங்கள் !

உலக மக்களிடையே நாம் அடையப்போகும் அவமானத்துக்கு அளவுமேதுமிருக்காது.  ஆனால் இதை NRI சங்கிகளிலிருந்து, உள்ளூர் காயலாங்கடை பெண் எழுத்தாளச் சங்கிகள் வரையிலான ஒரு கூட்டம் வரவேற்கிறதே ?

வரவேற்காமல் ?  பல்லாயிர வருடங்களாய் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, ஆள்பவன் என்ன சொன்னாலும் அதையேற்று, அதை மீறாமல் வழிமொழிந்து, மீறுபவனை காட்டிக் கொடுத்தொழித்து, சாறுண்ணிகளாய், ஒட்டுண்ணிகளாய் தங்களை மட்டும் செழிப்பாக்கிக் கொண்ட கூட்டமல்லவா அது ?  பருப்புக்கும், நெய்க்கும் பங்கமில்லை குனி என்றால் நெடுஞ்சாண்கிடையாக படுத்தே பழக்கப்பட்ட கும்பல் !

பெரியார், அம்பேத்கர் கண்களுக்கு 100 வருடங்களுக்கு முன்னரே அம்பலப்பட்டுப் போன அவர்கள்,  இன்றுதான் நம் கண்களுக்கு மெல்ல மெல்ல பகிரங்கமாக அம்பலப்படுகின்றனர், அவ்வளவுதான் !

மாலை மணி 05 : 00

வீட்டுச்சிறை வாழ்க்கையின் பத்தாவது நாள்.  இரட்டை இலக்கத்தை தொட்டுவிட்டாலும், ஏனோ இந்த நாள் மீது எனக்கு கடும் வெறுப்பே கிளர்ந்தது !

இதோ சுகாதாரத் துறை செயலாளர் கொரோனா பாசிட்டிவ்களை அறிவிக்க இருக்கிறார்.  ஒன்று இரண்டு எனக் கூடிக் கொண்டிருந்த அந்த பட்டியல், இரண்டே நாட்களில் 300க்கும் மேலாக எகிறியதற்கு இவர்கள் ஒரு வினோதமானக் காரணத்தைக் கூறுகிறார்கள்.  அது நம் மண்ணுக்கு உகந்த மொழியே அல்ல.  வன்மப் பின்னணியோடு இதற்கான வலை டெல்லியிலிருந்து பின்னப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.  இந்தியா முழுக்க இதையே பேசு பொருளாகவும் ஆக்கியிருக்கிறது.  ஒரே நோக்கம் என்னவாயிருக்குமென என் விரல்களால் சொல்ல, எனக்கு மிகவும் அருவருப்பாக உள்ளது.  அருவருப்புக்கான இன்னொரு காரணம் கீழே ஓடிக்கொண்டிருந்ததுதான் !

தனிமனித இடைவெளி கொள்கையை முறையாகப் பின்பற்றாததால், அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் ஏப்ரல் 14 வரை மூட உத்தரவு என இருந்தது !

சமூக விலகல் என்கிற வார்த்தை அநீதியானது, தனிமனித இடைவெளி என்கிற பதமே நாகரீகமானது என்றுணர்த்திய ஆசான் பாமரனுக்கு நன்றி.

தமிழகத்தில் பெரும்பாலான இறைச்சிக் கடைகளுக்கு உரியவர்களாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்.  அவர்களை இழிவுபடுத்த அகில இந்திய ரீதியில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவாகவே இதை அணுக வேண்டும்.  எவ்வளவு நைச்சியமாக சமூக விலகல், சமூக விலகல் என்றவாறே ஒரு சமூகத்தை ஒதுக்கி வைக்கிறார்கள் எனப் பார்த்தீர்களா ?  இதெல்லாம் புது உத்தியா என்ன ??

அரசனை ஷத்திரியனாக்கி விட்டு, வளையும் வணிகனை மட்டும் வைசியனாக்கி விட்டு, இதர மக்களையெல்லாம் இது போல ஒதுக்கி, ஒதுக்கியே, தனக்கான இடத்தை உசரத்தில் அமைத்து வைத்துக்கொண்ட கூட்டம் செய்யும் ஆதிகால உத்தி.  மிக மிகப் பழைய சூத்திரம்.  அதனால்தான் ஆள்பவன் எவனோ அவனுக்கு ஜால்ரா போட ஓடி வந்துவிடும் அந்தக் கூட்டம் !

நல்லவேளை, தூங்கப் போவதற்குள் அந்த இறைச்சிகடை விவகாரத்தில் குட்டிக்கரணம் போட்டிருக்கிறது அரசு.  திங்கட்கிழமை மகாவீரர் பிறந்தநாள் என்பதால் அன்றுமட்டும் விடுமுறையாம்.  மற்ற நாட்களில் செயல்படுமாம் !

இன்னும் மீதி நாட்கள் முடிவதற்குள், மீதி வாழ்க்கை முடிவதற்குள், என்னென்ன கொடுமைகளையெல்லாம் காணவிருக்கிறதோ இந்தக் கண்கள் ???

இதும் போம் !

நன்றி.

தொடரும்…..

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்