கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 53

16/05/2020, சனிக்கிழமை

பகல் மணி 10 : 00

டாஸ்மாக் கடைகளைத் திறப்பது அரசின் கொள்கை முடிவு என்று தமிழக அரசின் வழக்கறிஞர் கூறிய மாத்திரத்தில், உச்சநீதிமன்றம் நடுநடுங்கிப் போய்விடுகிறது !

சென்னை உயர்நீதிமன்றம் எதற்காக அந்தத் தடை.யை விதித்தது என்பதைக் கூட அது ஆராயவில்லை.  அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என அபத்தமாக ஒரு தீர்ப்பையளித்து இன்று தமிழகத்தின் பெரும்பாலான மதுக் கடைகளைத் திறக்கத் தடையேதுமில்லையென உயர்நீதிமன்ற ஆணையைத் தகர்த்தெறிந்தது !

மக்களும் அடடா, நீட் தமிழகத்துக்கு தேவையில்லை என தமிழக அரசு கொள்கை முடிவெடுத்ததே, அதை நீங்கள் ஏற்றீர்களா ?

ஜல்லிக்கட்டுத் தடையின் போதும் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைக் கூட மதிக்காமல்தானே தடையை நீடித்தீர்கள் ?  பின், மாபெரும் போராட்டத்தால்தானே அதைச் சாதிக்க முடிந்தது ?

இப்படி இரு தீர்ப்பு வருமெனெ எதிர்பார்த்து  வானவில் நிறங்களில் நாளுக்கொரு வண்ணத்தில் டோக்கன்களை தீர்ப்பு வருவதற்கு முன்னரே அச்சடித்து வைத்துக் காத்திருந்தது தமிழக அரசு.

இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு சமயத்தில் நடக்கும் மது விற்பனையை தடை செய்ய வேண்டுமென போட்ட ஒரு பொதுநல வழக்குதாரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை விதித்தது அது.  கேட்டால் அந்த தன்னார்வலர் தன் விளம்பர வெறிக்காக அந்த வழக்கைப் போட்டாராம்.   அய்யா நீதிபதிகளே, இந்தச் சமயத்தில் என்ன நோக்கத்துக்காக அந்த வழக்கைப் போட்டிருப்பார் என்பதை கொஞ்சம் கூடவா புரிந்துக் கொள்ள மாட்டீர்கள் ?  அதைத் தள்ளுபடி செய்வதே நீதிக்கு இழுக்கு, இதில் அவருக்கு தண்டம் வேறு ?  இத்தோடு நிறுத்தினீர்களா என்ன ?

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா முழுக்க நடப்பதை தடை செய்து, அவர்களைப் பாதுகாப்பாக வண்டிகளில் அனுப்பி வைக்க வேண்டுமென வழக்கு போட்டால், யாரார் நடக்கிறார்கள் என எங்களுக்கு எப்படி தெரியும் ? அவர்கள் நடப்பதை யார் தடை செய்ய முடியும் ?  அவர்களை நடக்காதீர்கள் என நாங்கள் எப்படி சொல்ல முடியும் ?  அவர்கள் பயணங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க நாங்கள் எப்படி மாநிலங்களுக்கு உத்தரவிட முடியும் என்கிறீர்கள்.  பின் எதற்குத்தான் நீதிமன்றங்கள் ?  உங்களுக்காக பல கோடிகளை மாசத்துக்கு செலவு செய்ய எங்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறதே, அதெல்லாம் அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை மட்டும் கேட்பதற்கா ?  எங்களுக்காகத்தானே அய்யா நீங்கள் பல உத்தரவுகளை அரசுக்கு போட வேண்டும் ?  எங்களால் முடியுமா என எங்களையேக் கேட்கிறீர்களே ?  ஒரு பேரிடர் பொழுதில் சாமானிய மக்களுக்காக எழாத உங்கள் குரலால், இந்த மக்களாட்சி நாட்டுக்கு என்ன பயன் ?  அநீதியால் மனம் வெம்பிப்போன நாள் இன்று !

பிற்பகல் மணி 02 : 00

மதுக்கடைகள் திறப்புக்கான வெற்றியை அரசு கொண்டாடியதோ இல்லையோ ஊடகங்கள் வெறி பிடித்து கொண்டாடித் தீர்த்தன.  டாஸ்மாக் திறப்பை வெறி பிடித்து செய்தீர்களெனில் அடுத்து நீங்கள் வெல்வது கனவாகும் என டாப் ஏஜண்ட் கூறிய எச்சரிக்கையைக் கூட  கால்தூசென மதித்து, எடப்பாடி வென்றதை, பெரும் வீரமாக ஊடகங்கள் கருதின !

மதுக்கடைகளைத் திறக்கும் முன்னரே அங்கு தம் நிருபர்களையும், நேரடி ஒளிபரப்பு வசதி கொண்ட வேன்களையும், ஒவ்வொரு டிவியும், ஒவ்வொரு பகுதிகளுக்கு தவறாமல் அனுப்பிவிட்டன.  லைவ்வில் மதுப்பிரியர்கள் மதுவுக்காக ஏங்கி பல கிலோமீட்டர்களுக்கு காத்திருப்பது, ஊடகங்களுக்கு மாபெரும் சாகஸமாகப் படுகிறது.  இதுகூட எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகளில் ஒன்றென புகழ்பாடுவார்கள் போல ?

இந்த அழகில், வண்ண டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளச்சந்தையில் சிலர் 200 ரூபாய்களுக்கு விற்று, அது கண்டறியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு.  எய்யா இதையெல்லாம் சார்ந்தோர்தானே செய்ய முடியும் ?  இவ்வளவு சீக்கிரம் அதே கலர், அதே ரக பேப்பர்கள் கிரிமினல்களுக்கு கிடைப்பதெல்லாம் சாத்தியமா என்ன ?  உண்ட வீட்டுக்கே இரண்டகம் பண்ணுற வீட்டுப் பெருச்சாளிகள்தான் இதுக்கு காரணமா இருக்கும்.  எனவே யார் செஞ்சாகன்னுல்லாம் பெருசா விஷயம் வெளிய வராது !

 

ஆனால் மதுப்பிரியர்களை தமிழக அரசு  காக்கும் தெய்வங்களெனப் போற்ற, அவர்களை மட்டும் கோமாளிகளாகக் காட்டுவதில் ஊடகங்கள் முனைப்பு காட்டுவது எரிச்சலாக இருந்தது.  அவர்களும் இவர்களின் பொறியை  அறியாமல், சூப்பர் ஸ்டார் படங்களை முதல் காட்சிக்கே பார்க்க வரும் சில மூட ரசிகர்களைப் போல உடல் மொழியைக் காட்டி, மக்கள் மத்தியில் குடிகாரர்கள் என்றாலே மனம் பிறழ்ந்தவர்கள் என்பதைப் போல் கட்டமைத்து விடுகிறார்கள் !

அதிலொருவர் மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் வாங்கி குடிக்க வந்திருக்கிறேன் என்றார்.  வெல்டன் எடப்பாடி.  சரித்திரத்தில் என்றென்றும் இந்தக் கீர்த்தி உங்கள் புகழ் பாடும் !!!

 

தொடரும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  2. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  3. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  4. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  5. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  6. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்