கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 36

29/04/2020,  புதன்

காலை மணி 11: 00

ஒரு கணக்கெடுப்பை அமெரிக்காவில் தயாரித்திருக்கிறார்கள்.  அது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா பாதிப்பின் பின் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பில் எவ்வளவு வார்த்தைகளை பேசியிருக்கிறார், எதைப் பற்றி அதிகம் பேசினார், உபயோகமாக எத்தனை வார்த்தைகள் பேசினார், கோமாளித்தனமாக எவ்வளவு வார்த்தைகளை உதிர்த்தார் ? என ருசிகரமாகப் போய்க் கொண்டிருக்கிறது அந்தப் புள்ளி விவரங்கள் !

அதில் அவர் 600 வார்த்தைகளை தன்னைத் தானே புகழ பயன்படுத்தியிருக்கிறார் என ஏளனம் செய்திருக்கிறார்கள் !

உலகிலேயே தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளும் தலைவர்களுக்கிடையேயான போட்டியை மட்டும் அந்த புள்ளி விவர நிறுவனம் 2015 – 2016 ல் எடுத்திருந்தால், நம் ஸ்டீல்மங்கைதான் முதல் பரிசைப் பெற்றிருப்பார் என அந்த நிறுவனத்திற்குத் தெரியாதென்பது நம் தீயூழ் !

எந்த ஒரு கூட்டுமுயற்சியைக் கூட நான், என் என்றே சுயபுகழ்ச்சிப் பேசிப் பழகிய புரட்சித்தலைவி.  ஒரு வருட அறிக்கையில் மட்டும் அப்படி பல லட்சம் வார்த்தைகளை அந்த அம்மையார் உபயோகித்திருப்பார்.  அம்மையார் இன்னோரு திணிப்பு வேலையையும் செய்திருந்தார்.  தான் மட்டும் தன்னைத்தானே புகழ்ந்துக் கொண்டால் போதுமா ?  பிறரும் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா ஆணைக்கிணங்க என்றுதான் பேசவே ஆரம்பிப்பார்கள்.  குலோத்துங்கவை விட்டு விட்டான் பார்த்தியா சசி என அதைச் சரியாய்க் குறிப்பெடுத்து தண்டிக்குமளவு நார்சிசம் ஊறிய  தாய் !

தன்னைத்தானே புகழ்ந்துக் கொள்வது தற்கொலைக்குச் சமானம் என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.  ஆனால் மூடர் சூழ் உலகில் அத்தகையத் திணிப்புகள் தற்காலிக வெற்றிகளை ஈட்டித் தந்துவிடுகின்றன என்பதால், அந்தம்மா வாழ்ந்தவரை அந்த தற்கொலை முயற்சியை இடைவிடாமல் செய்தார். மிஸ்டர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் புரட்சித்தலைவியின் கால் தூசய்யா நீர் !

மாலை மணி 05 : 00

எதிர்பாராத மகிழ்ச்சியாக ஜோதிகாவை ஆதரித்து சூர்யா வெளியிட்ட கடிதமொன்று இணையத்தில் வைரலானது.  என்றோ நடந்த ஒரு விழாவில் எப்போதோ ஜோதிகா பேசிய ஒரு நற்கருத்தை, திரித்து சிலர் வசை பாடுகிறார்கள் என்பதற்காக, அந்தக் கருத்தை தெரியாமல் பேசிவிட்டாரென பின்வாங்குவோம் என்று நினைத்தீர்களா ?

முன்னோர்கள் பேசிய கருத்தையே வழிமொழிந்திருக்கிறார் ஜோதிகா.  எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் அந்தக் கருத்தை ஆதரிக்கிறது.  தொடர்ந்து அது போன்றக் கருத்துக்களைப் பேச வலியுறுத்தவும் செய்யுமென்று, சங்கிகளின் தலையைப் பிடித்து, சாக்கடைக்குள் ஆழமாய் அழுத்திவிட்டார் சூர்யா.

போதாதற்கு விஜய் சேதுபதியும் அந்தக் கடிதத்தை சிறப்பு என்றெழுதி ரிட்வீட் செய்ய, மொத்த பக்தாள் கூட்டமும் பேஸ்தடித்தது போலானது !

இரவு மணி 09 : 00

இவ்வளவு ரணகளாமானச் சூழலிலும், ஆமாம் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து தினமும் சதமாகப் போட்டுக் கொண்டிருக்கிறது.  அதிலும் சென்னை மட்டுமே தனியாகத் தொடர்ந்து மூன்று நாட்களாகச் சதம்.  நாம் இவ்வளவு துன்புற்றுக் கொண்டிருக்கும் வேளையில் டெல்லி சைக்கோக்கள் என்ன பண்ணியிருக்கின்றன தெரியுமா ?

நாம் பல வருடங்களாக இடைவிடாமல் போராடிப் பெற்ற ஒரு பகுதி வெற்றியான காவிரி மேலாண்மை வாரியம் (ஆணையம் எனச் சுருக்கியதால் அது பகுதி வெற்றி) பலவித குழப்பங்களுடன் தொடர்ந்தாலும், இரண்டு வருடங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இருந்ததால் எந்தப் பிரச்சினைகளும் எழவில்லை.  எழுந்திருந்தால் அந்த ஆணையத்தின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்திருக்கும்.  ஆனால் அதற்குள் அதைத் தூக்கிக் கொண்டு போய், ஜல் சக்தி என்கிற சமஸ்கிருத தலைப்பிலிருக்கும் ஒரு துறையின் கீழ் வைத்து விட்டார்கள்.  இதற்கு இந்த பருத்தி மூட்டை கர்நாடக அரசு கைலயே இருந்திருக்கலாமே என நம்மை புலம்ப வைத்திருக்கிறார்கள் !

இத்தகையச் சூழலில் தமிழக அனைத்து எதிர்கட்சியினரையும் உசுப்பி விட்டிருக்கிறது நடுவண்  அரசின் இந்த முடிவு.  இதை மாற்றிக் கொள்ளாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேருமென நடுவண் அரசை எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின் !

ஈனபுத்தி கொண்டோர் இதை மட்டுமா செய்தார்கள் ?  அவற்றை நாளை பார்ப்போம் !

 

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்