கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 46

09/05/2020,  சனி.

காலை மணி 11 : 00

ஊரடங்கு அமலிலுள்ளது.  போக, தொற்று அனைத்து இடங்களிலும் வெகு வேகமாகப் பரவிவரும் இன்றையப் பொழுதில், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க என்ன அவசியம் என்று கேட்டால், அதற்கு எங்கப்பன் குதிருக்குள் இல்லையென வைக்கோற்போரைப் பார்த்தபடி பேசிய, மூவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை வாசித்தேன், சுவரில் தலையால் அரை மணி நேரம் முட்டிக்கொண்டேன்.  நீங்களும் முட்டிக்கணுமா ?

அமைச்சர் உதயகுமார், ” மத்திய அரசுதான் ஊரடங்கு என்றாலும் பரவாயில்லை, பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை மட்டும் பிரித்துக் கொண்டு கடையைத் திறந்துக்கோங்கன்னுச்சி ”

இது கே.டி.ராகவன், ” அட  இவங்கத்தான் அவன் திறந்துட்டான், இவன் திறந்துட்டான், எங்க கஸ்டமர்ல்லாம் அவங்கிட்ட போறான், பொழப்பு போதுன்னு கத்துச்சிங்க.  போனாப் போதுன்னு தொறந்துத் தொலைங்கன்னு விட்டா, என்னமோ மோடிஜியே வந்து திறந்து வச்சாப்பலல்ல பேசுறாங்க ? ”

” ஏம்பா எங்களுக்கு என்ன ?  மூடுன்னா மூடுறோம், திறன்னா திறக்கறோம்.  அப்பாகிட்ட காசில்ல செல்லம், அம்மாக்கிட்ட வாங்கிக்கன்னு சொல்றதில்லையா ?  அது போல, நீங்களே கடைகளத் திறந்து கல்லாக் கட்டிக்கோங்கன்னாய்ங்க, எங்க மேல பாஞ்சா எப்படி ?  மேலருக்கவன கேளுங்கய்யா “.  நம்ம மீன்வளத்துறை ஜெயக்குமார் அளித்த பேட்டி !

அதெப்படி திடீரென புள்ளைப்பூச்சிகளுக்கெல்லாம் கொடுக்கு முளைச்சி புளிச் புளிச்செனக் கொட்டுதுங்கன்னு கவனிச்சீங்களா ?  இந்தச் சட்டமன்றம் முடிய இன்னும் முழுசா ஒரு வருடம் கூட இல்லை.  அதிகபட்சம் இந்த வருடத்தை தாண்டுமான்றதே டவுட்தான்.  எனினும் நமக்கு தேர்தல் வழக்கம் போல ஏப்ரல் 2021 ல் தான் நிகழும்.

ஆனால், இனி  நடுவண் அரசு தொடர்ந்து அதிமுக அரசின் மீதேறி சொகுசு சவாரி செய்ய முடியாது !

அவ்வப்போது சமாதானப் படலங்கள் அரங்கேறி அமைதியாகலாமே ஒழிய, இனி கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் படலம் இருபுறமும் சரிசமமாய் நிகழும்.  அதிகச் சேதாரம் பக்தாள்களுக்கே இருக்கும் என்பதால் ஹெச்.ராஜாக்கள், எஸ்.வி.சேகர்கள், மாரிதாஸ்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நல்லது.  அங்கிருந்து அடிச்சா இங்க உங்களுக்கு வலி மிகும்.  நான் சொல்றத சொல்லிட்டேம்ப்பா.  இல்லைன்னா இவ்வளவு பகிரங்கமால்லாம் காட்டிக் கொடுக்க மாட்டாய்ங்க !

அந்தத் தெனாவட்டில்தான், டாஸ்மாக் திறப்புக்காக, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி, உச்சநீதிமன்றம் போக வேண்டாம் என்று இங்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்த போதும், அதை உதாசீனம் செய்து, எடப்பாடி அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.  கேட்டா அந்தப் பழியையும் நடுவண் அரசு மீது போட்டுவிடலாம்.  பெண்களின் வாக்குகளை விட, குடிமகன்களின் வாக்கு நன்றி விசுவாசத்துடன் தங்களைக் காக்கும் என்கிற அபார நம்பிக்கை இரட்டை இலைக்கு உண்டாம் !

மாலை மணி 04 : 00

ஆச்சா ?  தமிழ்நாட்டுக்காரன்தான் மதிக்க மாட்றானுவன்னு பார்த்தா, மோடி இருக்கிற டெல்லில உட்கார்ந்துக்கிட்டே ஒருத்தர்,  “எவன்டா உங்கள எல்லாத்தையும் மூடிக்கிட்டு உள்ள இருக்கச் சொன்னவன் ?” என்கிற ரேஞ்சுக்கு மோடியை முழுவதுமாக டேமேஜ் செய்தவண்ணமிருந்தார் அவர் திரு. அகர்வால், நடுவண் அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்.

எல்லாம் கைமீறி போச்சு.  தொற்றெண்ணிக்கையும், இறப்பவர்களின் விகிதமும் அதிகரிச்சிக்கிட்டே போகுது.  உலகளவில் 16 வது இடத்திலிருந்த நாம், ஐந்தாவது இடத்தை எட்டிப் பிடிச்சிட்டோம்.  குஜராத்தும், மத்தியப் பிரதேசமுக் நம்மை முதலிடத்துக்கு கொண்டு போய் விட்டாலும் வியப்பதற்க்கில்லை.  எனவே, இனியும் ஊரடங்கு, வைரஸ் தொற்று என்றெல்லாம் பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருந்தோம்ன்னா பாதிப்பு குறையப் போறதில்ல, பொருளாதாரமும் பணால் ஆகிடும்.  அஞ்சு இலக்கச் சம்பளம், ஏழிலக்க கிம்பளம் வாங்குற எங்காளுக பொழைப்பு சிரிப்பா சிரிச்சிடும் என்கிற ரீதியில், பேட்டியளித்திருந்தார்.

என்ன சார் மோடியவே நக்கல் பண்றீங்களா ??

நம்மை உள்ளே முடக்கி வைக்க என்னென்னச் சொன்னார்கள் ?

” நீங்கள் பொதுவெளியில் ஒட்டி உரசி சுற்றினால் நோய் பெருகும்.  உள்ளேயே இருந்தால் நோயின் சங்கிலிக் கண்ணி உடையும்.  கொரோனாவுடனான போரில் அதை வெல்ல இதுதான் பிரதான வழிமுறை ”

நாங்க ஒன்றரை மாதங்கள் நீங்க கொடுத்த ஐநூறு / ஆயிரம் ரூபாய், பழைய அரிசி, கோதுமைய வச்சிக்கிட்டு அர வயிரும், கா வயிருமா கடந்தா, அசிங்கமா கொரோனாகிட்டத் தோத்துட்டு, வா வைரஸ்சுடன் பழகலாம்ன்னு அழைக்கிறீங்களே சார், எங்களையெல்லாம் பார்த்தா கேனைக மாதிரியே

இருக்குல்ல ?

கெட்டவையில் ஒரு நல்லதாக நான் பார்ப்பது, இவர்களெல்லாம் சாமானியர் கண்களுக்கும் அம்பலப்படுவது மட்டுமே !!!

 

தொடரும்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்