முதல்நாள், முன்னதிகாலை மணி 04 : 05

உடல் குலுங்கிக் கொண்டிருக்க திடுக்கிட்டு எழுந்தமர்ந்தேன்.  ஏதோ துர் கனவு.  இதுநாள் வரை அலட்சியமாக கடந்த நாட்களை, இனி எளிதே கடத்த முடியாது என மனதுக்கு புரிந்துவிட்டது !

சுகாதாரத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் தொற்று நோய் பரவுகிறது என ஒத்துக்கொண்ட பின்னும், நாட்டின் முதண்மை அமைச்சர், கற்பனையே பண்ணமுடியாத  மிகக் கடுமையான நட்டத்தைச் சந்திக்கவிருக்கிறோம் என கலங்கிய பின்னும், நிம்மதியாக தூக்கம் எப்படி வரும் ?

மார்ச் மாத இறுதி நாட்கள் என்பது எனக்கு அறுவடைக்காலம். ஒரு வருடம் முழுக்க உழைத்துச் சேர்த்ததை கேட்டு வாங்கும் நாட்கள்.  போச்.  ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும் பல்லைக் கடித்துக்கொண்டு சமாளிப்போம் என்றிருந்தேன்.  இப்ப 21 நாட்கள்.  அதுதான் தூக்கம் வரவில்லை !

இரண்டு நாட்களுக்கு மேல் எந்த மளிகைப் பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டாமென ஸ்ட்ரிக்டாகச் சொல்லியிருந்தேன் !

ஏங்க பக்கத்துவீட்டு அக்கா பத்து நாளைக்கு காய்கறியே வாங்கி வச்சிட்டாங்க, மேல கோகிலா அக்கா அடுத்த மாச மளிகை சாமான போன வாரமே வாங்கி வச்சாச்சு.

அதெல்லாம் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது, கடைகள திறக்கலாம்ன்னு அரசு சொல்லுதுல்ல, தேவையில்லாம அதிகமா வாங்கி வச்சா ஏழைகளுக்கு பொருளுங்க கிடைக்காது

ம்க்கும்

ஆனால், பருப்பு & பருப்புகளை தயாரிக்க உதவும் பயிர்களை வடக்கிலிருந்து தருவித்து தரும் எனக்கு, கடந்த மூன்று நாட்களாக என்ன நடக்கிறதெனப் புரிகிறது.  எந்தச் சரக்கு லாரிகளாலும் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுடைய மாவட்ட எல்லைகளையேத் தாண்ட முடியவில்லை.  இன்னும் ரெண்டு ஸ்டேட் தாண்டி, இவங்க சென்னைக்கு வந்து…….  அதுவரைக்கும் இங்க ஸ்டாக்.  இதை இனி எப்படி வீட்டில் நான் சொல்வது ??

ஆஹா, மகன் காலைத் தூக்கி நெஞ்சில் தொம்மென்று போட்டதால் வந்த குலுங்கல்தான் எழுப்பி விட்டிருக்கு.  ச்சை, அதற்குள் எவ்வளவு விபரீதக் கற்பனைகள் ?

அவனை நோகாமல் புரட்டித் தள்ளிவிட்டு, ஏசியை போட்டேன், சில்லென்று அறைக்குள் மெல்லிய குளிர் பரவியதும் தூக்கம் வந்துவிடும் என்பது என் நப்பாசை !

மாநகராட்சிக்கு ஒரு வேண்டுகோள்.  இங்கு கொசு கடுமையாகப் பெருகியுள்ளது.  கொரோனா வைரஸ் மேல் அது செம கடுப்பில் உள்ளது புரிகிறது.  நம்மளயெல்லாம் இவனுக இப்பல்லாம் கண்டுக்கறதே இல்ல என்பது போல், கரம்வைத்து கடிக்கிறது.  Please Help Me.

முதல்நாள் காலை மணி எட்டே கால்.

குழந்தைகள் பாடும் சத்தம் தூக்கத்தைச் சற்றுக் கெடுக்கிறது.  டிவியில் ஏதோ சிங்கர் நிகழ்ச்சி.

எரிச்சல் பீறிட, ஏம்மா சவுண்ட குறைச்சி வச்சு பாக்க மாட்ட ?

பாக்க மாட்டேன்.

அப்ப கதவையாவது மூடி தாப்பா போட்டுட்டு போ

போட முடியாது, நீங்க எழுந்துருங்க.

ஏற்கனவே முழுமையான தூக்கமில்லாமல் கண்கள் எரிந்துக்கொண்டிருந்தன.  இவ வேற எரியும் நெருப்புல எண்ணெய்யக் கொட்டுறாளே ?

இன்னிக்கு ஏன் எழுந்திருக்கணும் ?  பன்னெண்டு மணிக்கு மேல எழுப்பு.

முடியாது

இவ என்னடா மணி சார் படம் பாக்கறாப்பால ரிப்ளே கொடுத்துக்கிட்டிருக்கா ?

உடம்பு பூரா ரிப்பேர், எழுந்து பல் தேச்சிட்டு வந்து யோகா பண்ணுங்க !

அடடா வீட்ல இருக்கிற இந்த நாட்களில் கடுமையா உடற்பயிற்சிகள் செய்வதுன்னு நைட்டு பீத்திருக்கேன், அய்யோ சோம்பேறிகள் பேச்சு சோம்பல் முறிக்கறதுக்குள்ள போச்சுன்னு மன்னிச்சி விட்றக் கூடாதா ?  மனதுக்குள் பேசிக் கொண்டே எழுந்துவிட்டேன்.  பின்ன அவ என்ன மோடியா, எடப்பாடியா ஈசியாத் திட்ட ?  வாழும் ஸ்டீல் மங்கை ஒய்.  அஞ்சு செகண்ட்ல ஆட்டோ மேல சுர்லா ஆசிட்டோட வருவான்

முதல்நாள் காலை ஒன்பதரை மணி

இதான் நீங்க யோகா செஞ்ச லட்சணமா ?  ஒக்காந்து கால நீட்டிக்கிட்டு நியூஸப் பாத்துட்டு இருக்கீங்க ?

செமையா பண்ணியாச்சு.  காஃபி கிடைக்குமா ?

முதல்ல வாழைத்தண்டு ஜூஸ்

பேசாம வண்டிய எடுத்துட்டு வெளிய போய் போலிஸ்ல சரணடைஞ்சிரலாம்ன்னு பாக்கிறேன்.

கெளம்புங்க.  முதுகுப் பிய்ய பிய்ய வைக்கிறான்

முதல்நாள் காலை மணி 11

 

டேய் டேய் எதொ ப்ரேக்கிங் நியூஸ் போடுறாண்டா, ரிமோட்டக் கொடுரா

நீ ஏன் இன்னும் ஆஃபிஸ் போல ?  அங்க போய்ப் பாத்துக்கோ.

ஆஃபிஸ் போனா சுட்ருவாங்கடா, ப்ளீஸ் அஞ்சு நிமிஷம்

அவ்ளொல்லாம் தர முடியாது.  பிரேக்கிங் நியுஸ் என்னான்றத பாத்துட்டுக் கொடுத்திடணும்.

அடப்பாவிகளா அடப்பாவிகளா எப்படிரா நாள்பூரா இந்த மோட்டு சமோசா தின்றத நான் பாத்துட்டுருப்பேன் ?  அர நாள் கூட கழியலையேடா ?  மிச்ச இருபதரை நாள் என் கதி ??

முதல்நாள் மதியம் மணி இரண்டு

அடடா சுடச்சுட வீட்ல மத்தியானம் சாப்பிடற சுகமிருக்கே ?

எதே ?  யோவ் முந்தா நாள்தான மூக்குப் புடிக்க மட்டன் சுக்காவ புரட்டி புரட்டி மொக்குனீங்க ?

ஓ போன சண்டேதானா இது ?  ரொம்ப நாளானாப் போல ஒரு ஃபீலிங்.  ஆனாலும் நீ வைக்கிறாப்பல சாம்பார் வைக்க உலகத்துல ஆள் இல்ல.

சாயங்காலம் மசால்வடை சுட்டுடறேன். இப்ப சாப்பிட்டு தூங்குங்க.  அவன்கிட்ட ரிமோட் கேட்டு சண்டை போட வேணாம்.  அதான் உங்க மூத்த பொண்டாட்டி கைலயே ஒட்டிக்கிட்டு இருக்கால்ல ?  அதுல நியூஸ் பாத்துக்கங்க.  முதல்ல சானிடைசர் போட்டு அதத் துடைங்க.  கருமம் அதுல இருக்கும் போல ஆயிரம் கரோனா.

சக்களத்தி மேல அவ்ளோவ் பொர்றாம ?

அடடா, அ மார்க்ஸ் அய்யா தத்துவம் என்னமா வேலை செய்யுது ?  எத்தனை கோடிகள  அள்ளிக் கொடுத்தாலும் எடப்பாடிக்கு நீங்க ஈக்வல் ஆக மாட்டீங்கன்னு சொன்னா அவருக்கு எதுனா கெடைக்குமோ இல்லையோ, எனக்கு மொறு மொறுன்னு மசால்வடை கிடைக்கும்.  எப்படியும் இந்த ஊரடங்கு முடியறதுக்குள்ள பத்து கிலோ எடை கூடி, அசிங்கமா ஆகப் போறேன், குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ் கைஸ்

போரடிக்கைலைன்னா, கண்டெண்ட் கெடைச்சா தொடரும், நன்றி !

 

# நாள் 1

தேதி 25/03/2020, புதன்கிழமை.  

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  46. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  47. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்