கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !

நாள் # 13

06/04/2020  திங்கள் காலை மணி 10 : 00

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாதென, அவ்வப்போது நான் சம்பந்தப்பட்டிருக்கும் வணிகத்தொழிலுக்கான தன் சட்டத்தை அரசு நெகிழ்த்தி,  சரக்குகளை தருவிக்கச் செய்கிறது.  அதன்படி இன்று, பருப்பு மற்றும் பருப்புவகை மூலப்பயிர்களை மராட்டியம், குஜராத், கர்நாடகாவிலிருந்து லாரிகளில் பெற அலுவலகம் போக வேண்டி வந்தது.  நடக்க ஆரம்பித்துவிட்டேன் !

காலை மணி 11 : 00

தினமும் ஸ்டான்லி மருத்துவமனையைக் கடந்தே நான் பயணிக்க வேண்டும்.  அடிக்கடி அதன் வரலாற்றையும், அதன் சேவைகளையும், அதன் மேம்படுத்தப்பட்டிருக்கும் தரத்தையும் எண்ணி வியப்பேன், விவாதிப்பேன் !

மருத்துவக் கல்விக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள்,  தமிழக அளவில் முதல் நூறு இடங்களுக்குள் வருபவர்களில் பெரும்பாலோர் விரும்புவது சென்னை GH மருத்துவக் கல்லூரி, அடுத்து இந்த ஸ்டான்லி.   இந்த இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளுமே வடசென்னை சார்ந்து அமைந்ததில் ஏகப் பெருமிதம் எனக்குண்டு !

ஆங்கிலேயர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டமைக்கப்பட்ட இந்த மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளால் மக்கள் அடைந்த பயன்கள்தான்  எத்தனையெத்தனை கோடி, அதுவும் சேவை முழுக்க முழுக்க இலவசமாய் ??

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இங்கு மருத்துவத்தின் நிலை என்ன ?  யாரார்க்கெல்லாம் அந்த மருத்துவம் கிட்டியிருந்திருக்கும் ? ஏழைகளோ / ஒடுக்கப்பட்ட மக்களோ வயிற்றுவலியில் துடித்திருந்தால், திருநீறு, வேப்பிலை வைத்தியத்தை தாண்டி அவனுக்கு வேறாதாவது மருந்து கிட்டியிருக்குமா ?  போர் புரியாத, பசியால் சாகாதிருந்தால் அப்போது அவனுடைய சராசரி வாழ்நாள் வயதென்ன ?

அய்யய்யோ டெல்லி கரோனா, துலுக்க கரோனா என இப்போதும் கதறுபவர்கள்தானே பெரு நோயாளிகள் நுழையக்கூடாதென அப்போதும் போர்டு வைத்து அவர்களை சமூக விலக்கல் செய்திருப்பார்கள் ?  அவர்களை ஆரத்தழுவி பரிவுடன் சிகிச்சையளித்து குணப்படுத்த மேலை நாடுகளிலிருந்துதானே ஆட்கள் வந்தார்கள் ?  ஈனர்கள் மொழியில் சொல்வதென்றால் பாவாடைகள் ??

நக்கல், நையாண்டி போர்வையில் சிறுபான்மை மக்களை இழிவு செய்ததைத் தாண்டி இவர்கள் பிடுங்கியதுதான் என்ன ?  ஒன்றுமேயில்லை.   அன்றுமில்லை, இன்றுமில்லை, என்றுமில்லை !

காலை மணி 11 : 30

ஆனால் ஆன்மன் எழுதிய பதிவொன்று என்னைத் துணுக்குறச் செய்தது.  ஏப்ரல் 2ம் தேதி, உடல்நிலை மோசமானதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு முதியவர், சிகிச்சைப் பலனின்றி அன்றே இறக்கிறார்.  அவருடைய உடலை கூராய்வு செய்துவிட்டு, உறவினர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள்.  அந்த உடல் முதியவருக்குச் சொந்தமான தென் மாவட்டமொன்றுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது.  அங்கு அவருக்கு இறுதிச்சடங்கு நிகழ்கிறது.  ஆனால் அவருடைய ரத்தப் பரிசோதனைகளின் முடிவு 5ம் தேதி வருகிறது.  அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது !

ஆமாம், இன்றைய தமிழக சுகாதாரத்துறை செயல்படும் விதத்திற்கு சிறப்பானச் சான்று இதுதான்.  ஆனால் அய்யோ எடப்பாடி, அய்யய்யோ விஜய்பாஸ்கர், அய்யோ அம்மா பீலா என்று துதிபாடிகள் வலைத்தளமெங்கும் செய்வதெல்லாம் போலிப் பரப்புரைகள் மட்டுமே !

இந்த அவலத்தால் இன்று அந்த உடலோடு பயணித்தவர்கள், தொட்டுத் தூக்கி,  இறுதி காரியங்கள் புரிந்த அனைவரையும் சோதிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும், அதற்கு முன் தேடவேண்டும், ஊடகங்களில் மிரட்டி அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பின், பொய்கூறி இழிவு செய்ய வேண்டும் !

நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் சுரண்டல்களுக்கிடையே, இதுபோல பல்லாயிரக்கணக்கில் நிரந்தர நன்மைகளையும், அனைத்து மக்களுக்கும் புரிந்து  சென்றிருக்கிறான் என்பதுதானே நிதர்சனம்.  அதைக் கொண்டு பெயர் வாங்கும் இவர்களோ, அதையே தலைகுனிய வைக்குமளவு நிர்வாகம் புரிகிறார்கள் !

பிற்பகல் மணி 02 : 00

அலுவலகப் பணிகளுக்குப் பின், நாட்டின் முதன்மை அமைச்சர், தன் கட்சியின் நாற்பதாம் ஆண்டு நிறைவு நாளுக்கான சிறப்பு வீடியோ உரையைக் கேட்டேன்.  அந்த உரை மக்களுக்கானது அல்ல, அவருடையக் கட்சியினருக்கானது.  மோடியின் சிந்தனைகள் என்றுமே குதர்க்கமானவைகள் என்பதற்கு அவர் பேச்சிலிருந்து ஒரு சான்று பாருங்கள்.  பசித்திருக்கும் மக்களுக்கு உணவளியுங்கள் என்பது நேர்மையான சிந்தனை.  ஆனால் வீட்டில் உட்கார்ந்து நீ மூன்று வேளை உண்ணாதே, அதில் ஒருவேளை உணவை தியாகம் செய் என்பது குதர்க்கம்.  ஆமாம், தன் கட்சியினரை ஒருவேளை பட்டினி கிடந்து பிறருக்கு உணவளிக்கச் சொல்கிறார் இந்தக் கருணானந்தர்.  கட்சியினர் PM CARE FUND ற்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென்றும், அதைத் தங்கமாகவும், நகைகளாகவும் கொடுத்து நாட்டை காக்கவேண்டும் என்கிறார்.  எனக்குள் கிளறும் பேரச்சம் என்னவெனில், அடுத்து ஏதாவது ஓர் எட்டு மணி இரவில் இதை அவர் மக்களுக்கும் நிச்சயம் சொல்வார்.  அதற்கு மக்கள் ஒருவேளை செவி சாய்க்காவிடில், 1000 ரூபாய் நோட்டு கதி, நம் தங்க கையிருப்புகளுக்கும்  நிகழலாம் !

அந்திமாலை 06 : 00 மணி

ஞாயிறு மாலை பட்டாசுகள் வெடித்த பாரதிய ஜனதா மற்றும் RSS & இதர சங்கிகள் செய்த கலாட்டாக்கள் தொடர்ந்து பார்வைக்கு வந்துக் கொண்டே இருந்தது.  தீப்பந்தங்களோடு ஊமைவிழிகள் க்ளைமேக்ஸ் பாணியில் பல கிமீ நீள பேரணி ஒன்று, சோலாப்பூர் விமான நிலையத்தை மொத்தமாக போகி கொளுத்திப் போட்ட கூட்டமொன்று, துப்பாக்கியால் வானத்தில் மிதந்த கொரோனாவைச் சுட்ட பாஜபா மகளிரணி தலைவி, அட அடா, நமக்குத்தான் எப்பேற்பட்ட அடிமை கூட்டம் வாய்த்திருக்கிறதென அமித்ஷா கைகொட்டிச் சிரித்திருப்பார் !!!

 

தொடரும்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்