கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 33

26/04/2020,  ஞாயிறு காலை மணி 10 : 00

ஊரடங்குக்கே ஊரடங்கு போட்ட உத்தமர்களால், ஊரில் இன்று பேரமைதி நிலவியது.  சாலையில் மருந்துக் கடைகளைத் தவிர வேறெந்தக் கடைகளுமில்லை.  அசட்டுத் துணிவில் திறந்த சில கடைகளுக்குச் சீல் வைத்ததோடு, கடைக்காரர்கள் கைதும் செய்யப்பட்டனர் !

உண்மையிலேயே ஆட்சியாளர்களின் அனைத்துச் சட்டங்களையும் பெரும்பாலான மக்கள் மதித்தனர்.  இக்கட்டான நிலையிலும் சமூகத்துக்காக பல்லைக் கடித்துக் கொண்டு அடைந்துக் கிடந்தனர் !

பிற்பகல் மணி 02 : 00

இந்த திடுக் ஊரடங்கிற்காக நேற்று வீட்டின் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சந்தைகளில் கூடிய கூட்டத்தைக் கண்டு அனைவருக்கும் பதைபதைப்பு கூடிப் போனது.  “விளம்பர வெறி பிடித்து இப்படி உங்கள் அதிகாரத்தைக் காட்ட மக்களைப் பந்தாட வேண்டாம்” என ஆளும் மாநில அரசைக் கடுமையாகச் சாடியிருந்தார் எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் !

மாலை மணி 05 : 00

கொரோனாவால் மரணமடைந்தவர் உடலை எரிக்கவோ / புதைக்கவோ தடுப்பவர்களுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை என்கிற அவசரச் சட்டத்தை தமிழகமும் இயற்றியிருந்தது.  தாமதமென்றாலும் அடுத்து ஓர் இழிவு நிகழும் முன்னாவது செய்தார்களே என்று ஆறுதல் கொள்ள வேண்டியதுதான் !

இரவு மணி 08 : 00

சிங்கிள் சோர்ஸாகவே இருந்த கோவிட் 19 தொற்றுப் பரவல், தமிழகத்தில் முதன் முறையாக டபுள் சோர்ஸ் என்கிற பதவி உயர்வைப் பெற்றது !

மதுரை கோயில் பட்டரின் தாயாரை கொரோனா தொற்று தாக்கி கொன்றது.  மதுரை மீனாட்சி கோயில் ஏற்கனவே மூடப்பட்டிருப்பதால், அதற்கு சீல் வைக்க வேண்டிய அவல நிலை ஏற்படவில்லை.  ஆனாலும், அந்த பட்டர் தொடர்ந்து கோயில் பணிகளுக்கு வந்திருந்ததால் யாரார்க்கு என்ன சோதனை, தனிமை பற்றியெல்லாம் கிசுகிசுப்பாகக் கூட செய்திகளைச் சொல்லவில்லை.  முன்னையிட்ட தீ.

ஆனாலும் இதனால்  பட்டர்கள் நுழைய மட்டுமே தகுதியிருப்பதாய்ப் புனையப்பட்ட கருவறை வரை உள்ளே சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிங்கிள் சோர்ஸ் என வாய் நிறைய, புன்னகை ததும்ப, 32 பற்களையும் காட்டி செய்தி வாசித்த சில சேனல்களால், இந்தப் புரட்சிச் சேதியை சீரணிக்க இயலவில்லை !

தப்ளிக் தப்ளிக் என தந்தியடித்த வாயெல்லாம் ரமலான் நோண்பின் முதல் நாள் வாழ்த்துகளைச் சொல்லி கஞ்சி குடிக்க ஆரம்பித்துவிட்டதால்தான் நாட்டில் இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டது என தம்பி ஒருவர் மகிழ்ச்சியுடன் சொல்லிச் சென்றார்.  அவருக்காக ஒரு கதை ;

இதே மதுரை கோயிலின் கருவறைக்கு 1939 ஆம் ஆண்டும் , பூட்டுக்கள் போட்டு மூடி, தரிசனத்துக்கு சிலரால் தடை விதிக்கப்பட்டது.   ஏன் ?

அன்றையத் தேதி வரை, நாடார்கள், பள்ளர்கள், பறையர்கள், சக்கிலியர்கள் போன்றோர் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஒரு கோயிலாக மதுரை கோயில் இருந்தது.  வைக்கம் போராட்டம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதும், தொடர்ந்து மெட்ராஸ் பிரசிடென்சி முழுக்க ஆலய நுழைவு போராட்டங்கள் நிகழ ஆரம்பித்தன !

திருக்குற்றலநாதர் கோவிலில் தன்னுடன் வந்த தலித் தலைவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் யாரையும் அனுமதிக்காத போக்கை நேரடியாக கண்டார் காந்தி.  அடுத்தமுறை நான் தமிழகம் வரும்போது இத்தகைய அசிங்கங்கள் நிகழா வண்ணம் போராட்டத்தைக் கையிலெடுங்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் வேண்டினார் !

காங்கிரசின் வைத்தியநாத அய்யர் தலைமையில், முத்துரமாலிங்கத் தேவர் இசைவுடன் வெற்றிகரமாக ஆலய நுழைவு அறப்போர், ஜூலை 1939 அன்று நிகழ்ந்தது.  வைத்தியநாத அய்யர்,  நாடார், பள்ளர் இன மக்களுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந்தார்.  கோவில் நிர்வாகம் சார்பாக அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்தச் சேதி காந்தியடிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.  மகிழ்ந்தார்.  வைத்திய நாத அய்யருக்கு சிலையும், தபால்தலையும் வெளியிடப்பட்டது !

ஆனால், ஆலயத்தில் பூசை செய்துக் கொண்டிருந்த பட்டர் குழு கொதித்துப் போனது.  ஆலயம் தீட்டுப்பட்டு விட்டதால், உரிய பரிகாரங்களைச் செய்யாமல், பூசைகள் செய்ய மாட்டோமென கருவறைக்குப் பூட்டு போட்டுவிட்டு போய்விட்டார்கள் !

அவர்கள் பரப்பிய கதைதான் பயங்கரம்.  ஆகம விதிகள் மீறப்பட்டதால் கோபமடைந்த மீனாட்சி அந்தக் கருவறையை விட்டே வெளியேறி விட்டாள்.  சாந்தி செய்யாது அங்கு மறு பிரவேசம் செய்ய மாட்டாள் என்றுவிட்டனர் !

அதிசயமாய், கோவில் நிர்வாகம் அவர்கள் வந்து திறக்கும் வரையெல்லாம் காத்திருக்காமல், பூட்டுக்களை உடைத்து, போரிட்ட பட்டர்களையெல்லாம் நீக்கிவிட்டு பூசைக்கு புது ஆட்களை இறக்கியிருந்திருக்கிறார்கள் !

இப்படியெல்லாம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பற்றியெல்லாம் துளி கூட அறியாமல், பார்ப்பனீயர்களிடம் சிக்கி சின்னபின்னமாகிக் கொண்டுள்ளது ஒரு கூட்டம்.  அவர்களை மீட்டெடுப்பதே இந்தியாவின் இன்னொரு விடுதலைப் போராக இருக்கும்.  போரிட்டுக் கொண்டே இருப்போம் !

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்