கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 40

03/05/2020,  ஞாயிறு

காலை மணி 10 : 00

நீட்டிக்கப்பட்ட இரண்டாம் ஊரடங்கின் இறுதி நாள்.  நாற்பதாவது நாள்.  இன்றோடு இந்த துயர்மிகு நாட்கள் முடிவுக்கு வரும், அதை விட இந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி கிட்டும்.  தன் மெய்வருத்தி இதற்கு மெய்ப்பு பார்த்து, சீர்படுத்தி, அழகிய தலைப்புகளோடு பதிவேற்றி, ஓயாமல் தனித்துழைத்து படாதபாடுபடும் கவிஞருக்கு இளைப்பாற சற்று வாய்ப்பு கிட்டும்.  ஆனால், இதெல்லாம் கனவாகிப் போய், புலி வாலைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருக்கும் கதையாய், இதை எப்படி யார் நிறுத்துவதெனப் புரியாமல், துன்பம் சுழற்றிச் சுழற்றி வெவ்வேறு ரூபங்களாய் அவரைத் துவைத்தெடுக்கிறது !

என் பேராசான் சுஜாதாவின் பிறந்த நாள்.  உயிர்மையின் சுஜாதா விருதுகள் வழங்கப்படும் விழா நாளும் கூட.  போனவருடம் வாசகசாலை, நண்பர் பிரபாகரன் போன்றோர் இணைய விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.  மதன்கார்க்கியின் உரை பிடித்திருந்தது.  இதுபோன்ற சுவையான நினைவுகளை அசைபோட மட்டுமே முடிந்தது.  ஏனெனில், கொரோனா சுனாமியில் இவ்வருட திறமையாளர்களை நம்மால் கண்டறியவியலவில்லை, கொரோனாவால் இலக்கியம் சந்தித்த இழப்புகளில் இது பிரதானமானது.  சுஜாதா விருது பெருமையையும், சலசலப்பையும் ஒருசேர கொண்டுவருவதில் புகழ்பெற்றது !

சுஜாதா பெரும்பாலோரால் போற்றப்படுகிறார், ஒரு சிலரால் தூற்றவும் படுகிறார்.  ஆனால் இளைஞர்கள், பதிப்பகங்கள் அவரால் கற்றதும், பெற்றதும்தான் மிக அதிகம் என்பதால்,  சலசலப்புகள் சற்றே கவனமீர்த்து பின் சவசவத்துப் போய்விடும் !

மதியம் மணி 02 : 00

நாளை பல கட்டுப்பாடுகளுடன் பலவிதமான தொழிற்சாலைகள், சிறு நிறுவனங்கள் திறக்கப்படவிருப்பதால், மனம் மகிழ்ந்த நடுவண் அரசு,  பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரியை உயர்த்த, அதை அப்படியே நம் தலையில் கட்டியது எடப்பாடியின் தமிழக அரசு !

அதனால் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய்களும், டீசல் மூன்று ரூபாய்களுக்கு நெருக்கமாக உயர்ந்து விட்டது.  மக்களிடமும் அதிக பணப்புழக்கம், மகிழ்ச்சி தாண்டவமாடுவதால், இதை பட்டாசு வெடித்து வரவேற்றனர் (என்று ஒரு சங்கி கூட எழுதக் கூசுவான் )

கடைவிரித்தும் கொள்வாரில்லாமல் ‘பேரல் பேரலாய் ஓசியிலக் கூட கச்சா எண்ணெய்யக் கொடுக்கிறேன் எடுத்துட்டுப் போங்கடா உற்பத்தியை நிறுத்த முடியல’ என வளைகுடா நாடுகள் கதறிக் கொண்டிருக்க, ஈவிரக்கமின்றி இப்போதும் விலைகளைக் கூட்டும் அரசுகள் வாய்க்க, தீயூழ் செய்தவர்கள் இந்தியர்கள் மட்டுமே, அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் !

இரவு மணி 08 : 00

தொழில்கள் முடங்கியதால் வருவாயுமின்றி, தங்க இடமுமின்றி, ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியுமின்றி, பல வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மற்றும் மேற்கு இந்தியா முழுவதிலும் தவித்துக் கதற, அவர்களை அவரவர் ஊர்களுக்காவது திரும்ப அனுப்புவோமென மிகத் தாமதமாக ஆனால் ஒரு நல்ல முடிவை நடுவண் அரசு எடுத்தது.  இந்த உத்தரவை சிலர் எரியும் வீட்டில் பிடுங்குவதைப் போலவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் !

கர்நாடகாவிலிருந்து ஒடிசா செல்ல முயன்றத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கிய மாநில அரசு அத்தோடு ஒதுங்கிக் கொண்டுள்ளது.  தலைக்கு 4000 ரூபாய்கள் என ஒரு தனியார் பேருந்து நிறுவனம் அவர்களிடம் பணம் வசூலித்து, பின் கொண்டுச் சேர்த்திருக்கிறது.  இது கர்நாடக அரசின் பெரும் வெட்கக்கேடான செயலென எதிர்க்கட்சி தலைவர் சிவக்குமார் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார் !

நம் மாநிலத்திற்காக உழைத்த மக்களை, அரசு செலவில் அல்லவா அனுப்பி வைத்திருக்க வேண்டும் ?  வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படும் இந்தியர்களை நாம் அப்படித்தானே நடத்துகிறோம் எனப் பொறிந்துத் தள்ளிவிட்டார்.  பிறகுதான் தெரிந்தது எடியூரப்பா மட்டுமல்ல அவருடைய ஓனர் மோடியே அப்படித்தான் என்று !

ஆமாம், ஒரு சில மாநிலங்களில் இப்படிக் கிளம்பிய ரெயில்களுக்கு எல்லாம் பயனாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையேல் அதை அந்தந்த மாநிலங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று விட்டது மோடி அரசு.  ஆஹா, மக்களின் அரசு.  இந்த மக்களால் ஆன அரசு !

சோனியா காந்தி முகத்திறைந்தார்ப் போல காங்கிரஸ் அந்தத் தொகையை ஏற்றுக்கொள்ளும் என அறிவித்தவுடன், கரியப்பப்பட்ட  மூஞ்சியைக் கழுவித் துடைத்துவிட்டு, சரி சரி 15% மாநில அரசு கொடுக்கட்டும், மீதியை நாங்க அட்ஜஸ்ட் பண்ணித் தொலைக்கிறோம் என்றிருக்கிறார் மோடி !

 

 

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்