கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 21 (இறுதி நாள்)
14/04/2020,  செவ்வாய்க்கிழமை
சித்திரை காலை மணி 10 : 00
ஊரடங்கின் இறுதிநாளான இன்று சித்திரையின் முதல் நாளாகவும் இருந்தது.  மாதத்தின் முதல் நாளே மோடியின் முகத்தில் விழித்துத் தொலைத்தேன்.  ஒரு N 95 மாஸ்கிற்கு கூட வக்கில்லாமல், துண்டால் முகத்தை மூடியபடி வந்தவர், பின் அதையும் எடுத்துவிட்டு பேச  ஆரம்பித்தார் !
ஏற்கனவே இந்தியாவின் பல மாநில அரசுகள், தாமே ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துவிட்டதால், இவரும் அதையே வழிமொழிவதோடு, மக்களுக்கு பல உதவித்திட்டங்களையும் அறிவிப்பாரென எதிர்பார்த்தேன்.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வத்துக்கு என்ன தேவையிருக்கு என்றார் கண்ணதாசன்.  இந்த மனிதர் அரைத்த மாவையே அரைத்ததோடு, உபரியாக மேலும் மூன்று நாட்களை நீட்டித்து, இரண்டாம் ஊரடங்கு நாட்களை மே 3 வரை இழுத்துவிட்டார்.  அவர் செய்தது அதை மட்டும்தான்.  ஆனால் அதையே இருபது நிமிடங்களுக்கு மேலாகப் பேசினார் !
இவர்களைப் போன்ற ஆட்களைத்தான் விகாஷ் புருஷ் என்று வடக்கில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  சற்றேனும் தங்களைப் பற்றிப் பேசுவாரெனக் காத்துக் கிடந்த அன்றாடங்காச்சித் தொழிலாளர்கள் நொந்து போனார்கள்.  இனியும் இவர்களை நம்பினால்,  பசியால் அனாதையாகச் சாகவேண்டுமென அஞ்சி, மும்பை, சூரத் போன்ற தொழில் நகரங்களிலிருந்து நேற்று பல்லாயிரம் பேர்கள், ரயிலடிகளில் கூட ஆரம்பித்து விட்டார்கள்.  பாந்த்ரா ரயில் நிலையத்தில் அவர்கள், ‘ எங்களுக்கு உணவும் வேண்டாம், உறைவிடமும் வேண்டாம், எங்கள் ஊர்களுக்கு ரயிலை மட்டும் இயக்குங்கள், அங்கு போய் குடும்பத்துடன் செத்துப் போகிறோம் ‘ எனக் கதறியது கல்மனத்தையும் கலங்கச் செய்தது !
ஆனால், மும்பை போலிஸ் அவர்களை அடித்துத் துரத்தியது.  இது இந்தியாவின் பிரதானத் தலைநகர் அனைத்திலும் நிகழ்ந்திருக்கும்.  ஊரடங்கு தளரும் எனக் காத்திருந்தவர்கள் அனைவரும் கடுமையாக ஏமாந்துப் போயினர்.  உயிர் பயம் காரணமாக சகித்துக் கொள்கின்றனர்.  ஆனால், பசியும், பிரிவும் அவர்களை என்னச் செய்யக் காத்திருக்கிறதோ ?
பிற்பகல் மணி 02 : 00
மோடியின் வெற்றுப் பேச்சுக்கு ஸ்டாலின் உடனடியாக அற்புதமான எதிர்வினை ஆற்றியிருந்தார்.  அந்த அறிக்கையை, இந்தியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் வாசித்து பார்க்கவேண்டும்.  அப்போதுதான், எவ்வளவு பலவீனமான ஆட்சி மேலே  நடந்துக்கொண்டிருக்கிறதென அவர்களுக்கும் புரியும் !
மாலை மணி 03 : 30
சமீபத்தில் வெளியானப் படமான  ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘  படத்தை விஜய் டிவியில் போட்டார்கள்.  ஈவிரக்கமில்லாமல் பிறரை ஏமாற்றி செழிப்பாக வாழும் நான்கு ஃப்ராட்கள்தான் பிரதானக் கதாபாத்திரங்கள்.  சதுரங்க வேட்டை பட பாணி வரிசையில், நவீன டெக்னாலஜி உலகின் கருப்புப்  பக்கத்தை விலாவரியாக அலசிய பொழுதுபோக்கு படம்.  படத்தின் நீதி கடும் ஏமாற்றத்தைத் தந்ததேயொழிய படமும், திரைக்கதையும், கதாபாத்திர வடிவமைப்புகளும் சொக்க வைத்தன !
இரவு மணி 10 : 00
இன்றோடு சிறைவாசம் முடிந்து, நாளை முதல் வழக்காமன வாழ்க்கை உலகச் சுழற்சியோடு இயைந்துவிடும் எனக் கண்டிருந்த கனா, கானல் நீராகப் பொய்த்துப் போய் விட்டது.  இந்த இருபத்தியோரு நாட்களைத் தொலைத்தது போல, இன்னும் 19 நாட்களை கடக்க வேண்டும்.  அதையும் கடக்கத்தான் போகிறோம்.  ஆனால் சிறைவாசம் அன்றேனும் முற்றுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி !
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்