கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 17

 

10/04/20 20, வெள்ளி

காலை மணி 08 : 30

” கோயில்களுக்கு போய் இருபது நாளாச்சே, கொஞ்சம் சீக்கிரம் எழுந்து, சாமி படங்களையெல்லாம் துடைச்சி, அதுக்கு பூப்போடணும்ன்னு இந்த மனுஷனுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா, அப்புறம் ஏன் உங்களையெல்லாம் கொரோனா பழி வாங்காது ?  ”

கோயில்களில்,  சிலைகளுக்கு அனைத்தும் நின்றுபோனாலும், குடும்பஸ்தன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக தூங்கிவிட்டால், அவனுக்கு மட்டும் அர்ச்சனைகள் நிற்பதில்லை !

காலை மணி 10 : 30

ஊரடங்கை மேலும் நீட்டிப்பதற்கு அரசுக்கு பல துறைகளிலிருந்தும் தொடர்ந்து பரிந்துரைகள் போவதைப் பார்த்தால், இந்தத் தொடரை இவர்கள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடித்து வைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்த கைகள் அனிச்சையாய் நடுங்க ஆரம்பித்து விட்டன !

தமிழக அரசு இதுவரைக்கும் ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய்களும், சில ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டும் உணவுப் பொருட்களையும் கொடுத்திருக்கிறது.  அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொடுத்துவிடுமென்றே வைத்துக் கொண்டாலும்,  முற்றிலும் பொருளீட்ட வழியில்லாமல் போய்விட்ட பல லட்சத் தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள், சிறு குறு ஜவுளி விற்பனையாளர்கள், மெக்கானிக்குகள், வாடகை வாகன ஓட்டுநர்கள், அய்யோ இந்த பட்டியல் நீளமானது, அவர்களுக்கெல்லாம் என்ன உத்திரவாதங்களைக் கொடுத்து, இந்த அரசுகள் அவர்களை மேலும் முடக்கவிருக்கிறது ?

நான் அறிந்தவரையில் வெகு வெகு சொற்ப வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே தங்களுடைய வாடகைதாரர்களிடம் வாடகை வசூல் விஷயத்தில் கொஞ்சம் வளைந்துக் கொடுத்திருக்கிறார்கள்.  பெரும்பாலும் மார்ச் மாத வாடகையை வசூலிக்காத ஹவுஸ் ஓனர்கள் அரிது.  காரணம் அரசு அவர்களிடம் ஜஸ்ட் கோரிக்கை மட்டுமே வைத்தது.  அதேபோல் மார்ச் மாத சம்பளமும் பெரிய கம்பெனிகள், எப்போதும் லாபத்தில் மட்டுமே இயங்கும் கம்பெனிகளைத் தவிர பிற நிறுவனங்கள் முழுமையாக வழங்கியது போல் தெரியவில்லை.  அப்படிச் சம்பளம் வராமல் தவிப்பவர்களைப் பற்றி நமக்கு ஏன் தெரியவில்லை என்றால் அவர்களுக்கு தங்கள் குறைகளை எப்படி, எங்கு, எவரிடம் சொல்லியழுவது எனத் தெரியாது.  அதுபோலொரு கூட்டம் நாட்டில் கோடிக்கணக்கில் உண்டென்பது ஒருபோதும் மதுவதந்திகளுக்கோ, ஹெச்.ராஜாக்களுக்கோ தெரியவே தெரியாது !

மின் கட்டணம், தொலைபேசி மற்றும் செல்ஃபோன் post paid, க்ரெடிட் கார்ட் மினிமம் கட்டணங்களைச் செலுத்துவதிலிருந்து எந்த விலக்கையும், எந்த நிறுவனங்களும் மக்களுக்கு அளிக்கவில்லை !

சமூகநீதியில் அதீத அக்கறை கொண்ட திராவிட ஆட்சி நடக்கும் நமக்கே இதுதான் கதி எனும்போது, வடக்கின் நிலை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாதளவு ரணக்கொடூரமாய் இருக்கும்.  பல நூறு கிலோ மீட்டர்கள் குடும்பம் குழந்தைகளோடு நடக்கவிட்ட பாவிகளின் ராஜ்ஜியமது !

முன்னாள் நிதியமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள், உடனடியாக அத்தகைய மக்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவியை வழங்கிவிட்டே, ஊரடங்குக்கான கால நீட்டிப்பை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.  மேலும், இவற்றை பிரதமரிடம்  வலியுறுத்திச் சொல்ல அனைத்து மாநில முதல்வர்களை வேண்டுகிறார்.  அப்படியெல்லாம் எந்த ஏற்பாடுகளையும் செய்யாமல், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், நிலை படுமோசமாகும் !

அந்திமாலை மணி 06 : 15

ஆறுமணிக்கே வண்ணமயமாக வந்திருக்க வேண்டிய சுகாதாரத் துறை செயலாளரைக் காணாமல் மனம் திக்கென்றது.  தாமதமாக வந்தவரும் வாயில் முக்காடோடு வந்திருந்தார்.  ஊருக்கெல்லாம் உபதேசம் சொன்னாலும் பொதுவில் அவர் அப்படி வரும் ஆள் அல்ல.  இது ஏதோ குறியீடு போல் எனக்குப் பட்டது !

நான் கணித்தது சரியாகப் போனது.  இன்று பேட்டியளித்தவர் அவரில்லை.  தலைமைச் செயலாளர் திரு.சண்முகம்.  வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவின் பெயரில் எனக் கூறி, புரட்சித் தலைவியின் பொன்னானக் காலங்களை நினைவு கூரச்செய்தார் !

முன்னிரவு மணி 08 : 00

சன் டிவியில் நாடோடிகள் 2 படம் பார்த்தேன்.  இந்தப் படம் உண்மையிலேயே என்னைக் கவர்ந்தது.  உடுமலை சங்கர் – கவுசல்யா இணைகளின் காதல், கலப்புமணம், கவுசல்யாவின் குடும்பம், அந்த இணைகளை நைச்சியமாகச் சதி செய்து புரிந்த ஆணவக் கொலை &  கொலை முயற்சி சம்பவங்களை புனைவுடன் கலந்து அளித்திருந்தார்

சமுத்திரக்கனி !

ஊர்ப்பகுதிகளில் மிக வெறியுடன் தெறிக்கும் ஆதிக்கச் சாதி திமிர், ஆணவம் பற்றித்தான் படம் பிரதானமாகப் பேசியது.

சாதி மாறி, அதிலும் தங்களுக்கு குறைந்த சாதி எனக் கருதும் சாதிப் பையனை, தன் இனப் பெண் எவளாக இருந்தாலும் அவள் காதலிக்கவோ, கரம் பிடிக்கவோ கூடாது !

இளமதி போல அப்படி எந்தப் பெண்ணாவது துணிந்து விட்டால், ஒட்டுமொத்த ஊர்ச் சாதிக்காரர்களும் ஒன்று சேர்ந்து, கைக்காசைப் போட்டுக் கூட, அந்த இணைகளைப் பிரிக்க அயராது பாடுபடுகிறார்கள்.  நிலை கைமீறும் போது இருவரையும் கொன்று போடுகிறார்கள் !

முக்கியமாக ஆதிக்கச்சாதிப் பெண்களை,  இனி யாரும் கனவில் கூட காதலித்து விடக்கூடாதென இளவரசனை, கோகுல்ராஜை, சங்கரை மட்டும் குறிபார்த்து சாய்த்ததைப் போல, ஆதிக்கச்சாதி பெண்களை காதலித்து மணம் புரிந்த, ஒடுக்கப்பட்ட இன ஆண்களை வெட்டிப் போடுகின்றனர் !

இதைத் துணிவாகக் காட்சிப்படுத்திய இயக்குனரையும், இசைந்து நடித்த நடிகர்களையும் மனதார மெச்சுகிறேன்.  இதற்குத் தீர்வாக சாதி துறந்த புது இனம் உருவாக்கப்பட வேண்டுமென்கிறார் இயக்குநர்.  இதில் கொஞ்சம் நெருடல் உண்டு.  பள்ளர் இன மக்களை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி, கவுரவப்படுத்த விரும்பும் கிச்சாத்தனமான சிந்தனை இது !

சமுத்திரக்கனி, இதன் பின்னாலுள்ள சில அபத்தங்களை புரிந்துக் கொள்ள வேண்டும்.  அதென்னடா உங்கூட்டுப் பெண்கள் காதலிச்சா மட்டும் உங்களுக்கு உடம்பெல்லாம் பத்தி எரியுது ?  பெண்கள் விருப்பத்துக்கு மதிப்பு கொடுங்கடா என்று ஆணவக்காரர்களின் பொட்டிலறைந்தார்ப் போல் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் , அவர்களுடையப் பெண்களுக்குள் இந்தக் கேள்விகள் நுழைந்துப் பரவ வேண்டும்.  காலம் சாதி வெறியன்களுக்கு சரியானப் பாடங்களைக் கற்பிக்கும்.  காதல் வாழ்க !!!

தொடரும்

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
 2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
 3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
 4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
 5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
 6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
 7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
 8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
 9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
 10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
 11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
 12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
 13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
 14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
 15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
 16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
 17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
 18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
 19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
 20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
 21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
 22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
 23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
 24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
 25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
 26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
 27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
 28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
 29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
 30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
 31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
 32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
 33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
 34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
 35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
 36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
 37. திடீர் தீபாவளி இரவில்......
 38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
 39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
 40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
 41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
 42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
 43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
 44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
 45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
 46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
 47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்