கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -நாள் # 29
22/04/2020, புதன்கிழமை
காலை மணி 09 : 00
இன்று பணிக்கு வந்த அனைத்து அரசு மருத்துவர்களும், தங்களது மேலாடையில் கருப்பு பட்டை ஒன்றைப் பொருத்திக் கொண்டு வேலையைச் செய்ய ஆரம்பித்தனர் !
இறந்த மருத்துவர்களின் உடலுக்கு கிட்டிய அவமரியாதைகளும், அரசின் அலட்சியமும், பாதுகாப்பு குறைபாடான ஆபத்துதவி உபகரணங்களும் அவர்களை மிகவுமே கொதிக்க வைத்துவிட்டன. இருந்தும் மக்களுக்கான சேவைகளை துளி நேரம் கூடப் புறக்கணிக்காமல், தங்களின் அறச்சீற்றத்தை மிக நியாயமான வழியில் வெளிப்படுத்தினார்கள் !
காலை மணி 11 : 00
கண் கெட்டபின் சூரிய வணக்கம் செய்கிறேன் பேர்வழி என காலையில் எழுந்து மேற்கு திசை நோக்கி தொழுதானாம் ஒருத்தன். அந்தக் கதையாய், மருத்துவர் சைமன் உடலுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக வருத்தமும், ஆறுதலும் தெரிவிக்க அவருடைய மனைவிக்கு போன் போட்டாராம் முதல்வர். ஆனால், மருத்துவரின் மனைவி நியாயமான ஒரு கோரிக்கையை முதல்வரிடம் வைத்திருக்கிறார். வேலங்காட்டில் புதைக்கப்பட்டிருக்கும் தன் கணவரின் உடலை மீண்டும் கீழ்ப்பாக்கம் கல்லறையிலேயே புதைக்க உதவ வேண்டும், ஏனெனில் அதுதான் அவருடைய இறுதி ஆசையாக இருந்தது என்று வேண்டியிருக்கிறார். ஆவன செய்வாரா முதல்வர் ?
நண்பகல் 12 : 30
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், கொரோனாவால் இறப்பவர்களுக்கு ஒரு கோடி நிவாரண உதவியைத் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தபோது, வெடித்துச் சிரித்த பலரது முகத்தில் கரியை அள்ளிப் பூசிக் கொண்டிருந்தார் மாண்புமிகு முதல்வர். மருத்துவர்கள் அவ்வாறு இறக்க நேரிட்டால், ஐம்பது லட்ச ரூபாய்களும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக அரச உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார், மாஸ்க் அணிந்திருந்ததால் அவர் மீசையில் மண் ஒட்டியிருந்ததா என என்னால் பார்க்கவியலவில்லை !
மாலை மணி 04 : 00
இனி கொரோனாவால் இறந்தவரது உடலை அடக்கம் செய்ய வரும்போது தடுத்தாலோ, அரசுப் பணியாளர்களைத் தாக்கினாலோ குண்டாஸ் என்றார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் !
இவர் எட்டடி பாய்ந்தால் நடுவண் அரசு பதினாறடி பாய்ந்தது. மருத்துவர்களையோ, செவிலியர்களையோ, மருத்துவ மற்றும் துப்புரவு பணியாளர்களையோத் தாக்கினால், அவர்களுடைய ஆம்புலன்ஸ் வாகனங்களைச் சேதப்படுத்தினால்,
ஏழு வருடங்கள் வரை சிறைத்தண்டனையும், குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதலுமுண்டு என்று அவசர சட்டத்தையே போட்டுவிட்டார்கள் !
ஆனால், இதையெல்லாம் டெல்லியில் கொரோனாவின் இரண்டாம் மரணமாக ஒரு பெண் இறந்து, அவர் உடலுக்கு இடுகாட்டில் நேர்ந்த அவமானத்தின்போதே, உடனடியாகச் சுதாரித்து காவல்துறை பாதுகாப்பும், சட்டமுமியற்றியிருந்தால், தமிழகத்திற்கு இத்தகைய இழுக்கே நேர்ந்திருக்காது !
தொடரும்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்