கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 27
20/04/2020, திங்கட்கிழமை
பிற்பகல் மணி 03 : 00
இந்த விடியல் தமிழர்கள் வரலாற்றில் ஒரு கருப்பு நாள். நேற்று நள்ளிரவு சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் வேலங்காடு மயானப் பகுதியையொட்டிய மக்கள் செய்த செயல் ஒன்று, சென்னைக்கும், தமிழகத்திற்கும் அகற்றவியலா கறையைக் கொடுத்துவிட்டது !
மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துவிட்டு, அதற்கு போதிய அறிவின்மை, கும்பல் கலாச்சாரம் என்றெல்லாம் பூசி மெழுக முடியாது. காட்டுமிராண்டிகள் கூட இவ்வளவு இழிவாக நடந்துக்கொண்டிருக்க மாட்டார்கள் !
சென்னை நகரின் பிரபல நரம்பியல் மருத்துவரான திரு. சைமன் ஹெர்குலஸ், கீழ்பாக்கத்திலிலுள்ள NEW HOPE MEDICAL CENTRE மருத்துவமனையின் இயக்குநர். 56 வயதைக் கடந்துவிட்ட இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட, உடனடியாக கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு அதற்கான சிகிச்சைகள் அவருக்கு போய்க்கொண்டிருக்கும் போதே, திடீர் மாரடைப்பால் இறந்து போயிருக்கிறார். இப்போது அது கொரோனா தொற்றால் உயிரிழந்த ஓர் உடல் !
உடனடியாகச் சேதி அரசுக்குச் சொல்லப்பட்டு, கொரோனோ தொற்றால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யும் முன் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டுமோ, அவ்வளவையும் நேர்த்தியாக மருத்துவமனையைச் சார்ந்த பணியாளர்களும், சென்னை மாநகராட்சியைச் சார்ந்த அரசு அதிகாரிகளும் சேர்ந்து செய்துவிட்டார்கள் !
இறந்த மருத்துவர் உடலைக் கொண்டுச் செல்ல அவருடைய மருத்துவமனையின் சொந்த ஆம்புலன்ஸ் வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் சார்ந்த பணியாளர்கள் பயணிக்க, இதர சில வாகனங்களில் அதிகாரிகள், மருத்தவரின் உறவினர்கள், அவருடைய மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவர்களில் சிலர் என அந்த மருத்துவரின் இறுதிப் பயணத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள் !
கீழ்பாக்கம் கிருத்துவர்களுக்கான இடுகாட்டை வாகனங்கள் அடைந்தபோது, எங்கிருந்துதான் அத்தனை பொதுமக்கள் வந்தார்களோ என கண்டறிய முடியாதளவு கூட்டம் !
” இறந்தவர் யார் எவர் என்கிற எந்த அக்கறையும் எங்களுக்கில்லை. கொரோனா பாதிப்பில் இறந்தவருடைய உடலை இங்கு புதைக்க அனுமதிக்க முடியாது. அதனால் நோய்த் தொற்று எங்களுக்கு ஏற்படும் ” எனச் சாலையை மறித்து அமர்ந்துவிட்டிருக்கின்றனர் !
இவர்களுக்கு எப்படி சேதி போனது ? சுற்றுப்புறத்தைச் சார்ந்த மக்கள் அதெப்படி திடுமென இவ்வளவு ஆவேசம் கொண்டவர்களாக மாறிவிட முடியுமென்று அனைவருக்கும் திகைப்பு. மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மக்களிடையே பேசி புரியவைக்க முயன்றிருக்கிறார்கள். மக்கள் தங்களுடைய முழு எதிரியாக ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும், அதனுள் இருந்தவர்களையும் கருதி வசைபாடியிருக்கிறார்கள் !
நிலைமை கைமீறிப் போகவே காவல்துறைக்கு புகார் அனுப்பவும், அங்கு சொற்ப அளவில் காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடியடி நடத்தினால் ஒரு நிமிடம் கூட தங்களால் தாங்கவியலாது என்று அந்த முரட்டுக் கூட்டத்தின் போக்கை அவதானித்துவிட்டக் காவலர்கள், வேலங்காடு மயானத்துக்கு உடலைக் கொண்டுச் செல்ல ஆலோசனை கூறியிருக்கிறார்கள் !
என்ன கொடுமை என்றால் அவர்களும், அது அந்தப் பகுதியைச் சேர்ந்தவரின் உடல், மருத்துவரின் உடல் என்பதைக் கண்டுகொள்ளவே இல்லை. கொரோனாவால் இறப்பவர்களுக்கு ஒரு கோடி நிதியை நிவாரணமாக வழங்க வேண்டுமென்றார் ஸ்டாலின். எள்ளி நகைத்த மிருகங்கள், குறைந்தபட்சம் பரிதாபமாகப் போன அந்த உயிரற்ற உடலுக்கேனும் சிறந்த பாதுகாப்புடன், கண்ணியக் குறைவில்லாமல் இறுதி மரியாதையைச் செலுத்தவேண்டும் என்கிற எந்த உணர்வுமே இல்லை !
இத்தனைக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இதே போன்றொரு கேவலமான சம்பவம் நிகழ்ந்த அவலங்கள் அனைத்தும் அரசுக்குத் தெரியும். அப்படியிருந்தும் எந்தவிதமான அறிவுரைகளும், புரிதல்களும் எந்தத் துறைகளுக்கிடையேயுமில்லை !
நள்ளிரவு மருத்துவரின் உடல் வேலங்காடு மயானத்தை நெருங்கியிருக்கிறது. கொரோனா தொற்றில் இருந்த உடலைப் புதைக்க எட்டடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்படவேண்டும் என்பதால் அங்கு முன்னதாகவே JCP இயந்திரம் வரவழைக்கப்பட்டிருக்கிறது !
கீழ்ப்பாக்கத்திலிருந்து வேலங்காட்டிற்கு பதினைந்து நிமிடங்களில் சென்றுவிட முடியும். ஆனால் அங்கும் இதுபோன்று மக்கள் கூடிவிட்டால் என்ன பண்ணுவதென சாவகாசமாகத்தான் கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் அங்கோ அன்னை சத்யா நகரைச் சார்ந்த மக்கள் பல நூறு பேர் கைகளில் தடியும், கற்களுமாக இந்த ஆம்புலன்ஸ்சிற்காக காத்திருந்தனர் !
இன்றுவரை தமிழகத்தில் 17 மரணங்கள் கொரோனா தொற்றால் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், குறிபார்த்து மூன்று மருத்துவர்களின் இறுதிச் சடங்குகளில் மட்டும் இத்தகைய அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன. அதில் நீலகிரியைச் சார்ந்த மருத்துவர் உடலுக்கு அத்தகைய அவமானங்கள் நிகழவில்லை என்று மறுத்திருக்கிறார்கள். ஆக, இரண்டு மருத்துவர்களின் உடலுக்கு மட்டுமே இத்தகைய அசிங்கங்கள் அதுவும் தமிழகத் தலைநகரில் அரங்கேறியுள்ளன !
தன் உயிரையும் பணயம் வைத்து இந்தப் பயங்கரச் சூழலிலும் சேவை புரிந்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களை, இந்தச் சம்பவம் என்ன புரிதலை ஏற்படுத்தும் ? அதுபற்றிய குறைந்தபட்ச கணிப்பு கூட அரசுக்கு கிடையாதா ? மூளையற்ற ஓர் அரசு நிர்வாகம் மட்டுமே இப்படிப்பட்ட கேவலங்கள் நிகழும்போது அது தொடர வாளாவிருக்கும் !
ஆமாம், அதன்பின் நடந்தவைகளையெல்லாம் எழுதவோ, பேசவோ எனக்கு அசூயையாக இருக்கிறது. சென்னைவாசி என்று எப்போதும் புகழ்பாடுமெனக்கு அந்த வார்த்தை புழு போல் நெளிய வைத்துவிட்டது. சாலையை மறித்த வேலங்காடு பகுதி மக்கள் ( உண்மையில் அது அவர்கள்தானா ? புலனாய்வு ஊடகங்கள்தான் ஆராய்ந்து உண்மையை மக்களுக்குச் சொல்ல வேண்டும் ) கற்களாலும், கட்டைகளாலும் அங்கு வந்த வாகனங்களை தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்சின் ஓட்டுனருக்கும், உதவியாளருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. சக மருத்துவர்களும் ஓட ஓட விரட்டப்பட்டு தாக்கப்பட்டிருக்கின்றனர். கொட்டும் ரத்தத்துடன் ஈகா திரையரங்கம் வரை அந்த ஆம்புலன்ஸ் வாகனம் அடித்துத் துரத்தப்பட்டிருக்கிறது !
நரம்பியர் நிபுணர்களில் சீனியரான அந்தப் புகழ் பெற்ற மருத்துவர், வெறும் மருத்துவராக மட்டுமின்றி தொண்டுள்ளம் கொண்ட கொடையாளராகவும் மிளிர்ந்திருக்கிறார். அப்பேற்பட்ட மனிதரின் உடலுக்கு இத்தகைய அவமானமா என்று அவருடைய சக மருத்துவர் வீடியோவில் தழுதழுக்க சொன்ன உண்மைக் கதையைத்தான், நான் மேலே எழுயியிருக்கிறேன் !
21 பேரைக் கைது செய்திருப்பதாக காவல்துறை சொல்லியிருக்கிறது, ஆனால் உண்மைக் குற்றவாளிகள் அவர்கள் மட்டுமேயல்ல என்று சார்ந்த பகுதி மக்கள் கொந்தளிக்கிறார்கள் !
ஆச்சர்யமாய் சில ஊடகங்கள் இதை விவாதப் பொருளாக்கின. உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து இந்த அசம்பாவிதத்தை வழக்காக எடுத்துக்கொண்டிருக்கிறது !
இந்த அசிங்கக் கதையைக் கேட்ட ஒடிசா அரசு, பணியிலிருக்கும் மருத்துவர் கொரோனாவால் இறந்தால், அந்த உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கமோ, தகனமோ செய்யப்பட்டும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், சூடு சுரணையற்ற நம் அரசு, இன்னமும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து தம்மை பழிவாங்கிய மக்களாகத்தான் பாவித்து நடத்துகிறதோ என்கிற சந்தேகம் இந்தச் சம்பவங்களால் எனக்கு கிளர்ந்திருக்கிறது !
ஒரே ஓர் உண்மையை அடித்துச் சொல்வேன். இன்று தமிழகம் சுகாதாரத் துறையில் இந்தளவு மேம்பட்டிருக்க ஒரே காரணம், அரசு மருத்துவர்கள் பலரின் தன்னலம் கருதாச் சேவைகள்தான். திடீர் சுழல்காற்றில், கோபுர உச்சிக்குப் போய் ஒட்டிக்கொண்டிருக்கும் குப்பைகளுக்கு அது தெரியாது, அவர்களின் தியாகங்களைப் பற்றிப் புரியாது !
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
- ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
- காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
- மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
- ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
- ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
- ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
- திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
- விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
- ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
- யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
- கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
- எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
- தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
- பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
- இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
- புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
- குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
- பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
- மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
- தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
- அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
- ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
- இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
- இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
- செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
- உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
- ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன்
- மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
- கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
- யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
- என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
- '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
- ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
- ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
- டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
- திடீர் தீபாவளி இரவில்......
- ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
- விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
- கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
- கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1 - ராஜா ராஜேந்திரன்