கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! – நாள் # 20

13/04/2020,  திங்கட்கிழமை

காலை மணி 10 : 00

தமிழகஅரசு, தயங்கித் தயங்கி ஊரடங்கை இன்று ஏப்ரல் 30 வரைக்கும் நீட்டிப்பதாக அறிவித்துவிட்டது.  அதற்கு முன் வந்த சேதிகளெல்லாம் நகைப்புக்குரியதாக இருந்தது !

சிகப்பு, ஆரஞ்ச், பச்சை வண்ணப் பகுதிகளாக மாவட்டங்களை அறிவித்து, அதற்கேற்ப 144 தடை உத்தரவை தொடரலாம் என முடிவெடுத்தார்களாம்.  அதன்படி ஊட்டி பச்சை வண்ணத்தில் இடம்பெறும் என்றார்கள்.  அதாவது கொரோனா தொற்றில்லாத பாதுகாப்பான பச்சை வண்ணப்பகுதியாம் !

கலர் கலராக இது மட்டும் நிகழ்ந்திருந்தால், .மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு நகர ஆரம்பித்திருப்பார்கள்.  எந்தப் புண்ணியவான் கனவில் உதித்த திட்டமோ ?  ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும்.  கோடைக்காலம்தான் சுற்றுலாத்தலங்களின் அறுவடை மாதங்கள்.  இந்தமுறை மொத்த விளைச்சலும் அடியோடு அறுக்க மாட்டாமல் பாழாகிப் போனது !

நண்பகல் மணி 12 : 30

எதிர்பார்த்ததைப் போலவே அரசு நேற்று தன்னார்வலர்கள் மீது திணித்த முடிவை எதிர்த்து, திமுக நீதிமன்றத்தை நாடியது.  தமிழகஅரசு எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் எதிர்ப்புகள் கிளம்ப, வழக்கம் போல அது குட்டிக்கரணமடித்தது.  ‘ அப்படி சொல்லலைங்க, தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ‘ என்று இழுத்து, ‘ உதவி செய்யத் தடையில்லை ‘ என்று சென்னை காவல்துறை ஆணையர் மூலம் சொல்லவைத்தது.  இருந்தாலும் அது நீதிமன்றம் வழங்கவிருக்கும் தீர்ப்பின் மூலமாகத்தான் துல்லியமாக அனைவருக்கும் புரியவரும் !

மாலை மணி 05 : 00

சென்னை அம்பத்தூர் சுடுகாட்டில் நிகழ்ந்த ஒரு கோரச்செய்தியைப் பார்த்து மனம் பேதலித்துப் போனது.  ஆந்திரத்தைச் சேர்ந்த மருத்துவரொருவர் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இறந்திருக்கிறார்.  வேறேதோ காரணங்களுக்காக அங்கு சேர்ந்தவருக்கு, கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.  அதீத மூச்சுத்திணறல் காரணமாக இறந்துபோயிருக்கிறார்.  கொரோனாவால் இறப்பவர்களை சார்ந்த மருத்துவமனைப் பணியாளர்களே இறுதிகாரியங்கள் அனைத்தையும் செய்து, மயானத்தில் எரித்துவிட உடன் செல்கிறார்கள் !

மயானப் பணியாளர்கள், மயானச் சுற்று வட்டார மக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய போதிய புரிதல்களில்லை.  அவர்கள் காலரா, பிளேக் போன்ற நோய்த் தொற்றுப் பிணங்களாகவே கொரோனோ தொற்றால் மரணமடைந்தவர்களையும் பார்க்கிறார்கள்.  அல்லது முரணான தகவல்கள் குழப்பி அவர்களை அப்படி நம்ப வைத்திருக்கிறது !

இந்தியாவில் இத்தகையக் குழப்பங்கள் இரண்டாம் கொரோனா தொற்றுச் சாவு டெல்லியில் நிகழ்ந்தபோதே நடந்தேறிய அவலம்.  எனில், அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும் ?  உண்மையான அறிவியல் பூர்வமான அறிவுரைகளை குறைந்தபட்சம் மயானப் பணியாளர்களுக்காவது நல்கியிருக்க வேண்டும்.  இதுபோன்ற பிணங்களைக் கையாள அவர்களுக்குத் தகுதியான பாதுகாப்பு உடைகள், உபகரணங்களை வழங்கியிருக்கவோ, அல்லது பிணத்தைக் கொண்டுவரும் மருத்துவமனை பணியாளர்களிடமே அவைகளை கொடுத்தனுப்பும் வழி முறையையாவது கடைபிடித்திருக்க வேண்டும் ! இதைப்பற்றிய எந்த அறிவுமில்லாமல் அனைவரும் நடந்து கொள்ள, வானகர அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவர் உடலை எரிக்க அனுமதிக்க முடியாது என மயானப் பணியாளர்கள் வாதிட, அவர்களுடன் அக்கம்பக்க மக்களும் இணைந்துக் கொள்ள, அங்கு வதந்திக்கு கை கால் முளைத்தது !

கொரோனா தொற்றி இறந்த அந்த உடலை எரிப்பதன் மூலம் காற்றில் கொரோனா வைரஸ் பரவும் என்றெல்லாம் பேத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.  சண்டை முற்றவே, கொண்டு வந்த அந்த மருத்துவர் உடலை அப்படியே மயானத்தில் வீசிவிட்டு அந்தத் தனியார் மருத்துவமனை பணியாளர்கள் கிளம்பிப் போய் விட்டார்கள் !

மனிதம் மிகுந்த, அறிவாளிகள் அதிலும் பகுத்தறிவாளர்கள் நிறைந்த தலைநகரத்தில் நடந்த அவமானகரச் செயலல்லவா இது ?  சங்கிகள் ஆளும் நாடு இப்படி சிதையும் என்பது எழுதப்படாத விதி.  தலைவிதி !

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்